ஏபிசி நீ வாசி!வாத்தியாருக்கும் ஸ்டூடண்டுக்குமான மூங்கில் குச்சி லடாய்கள் எப்போதும் உண்டு. ஆனால், இந்த லிஸ்ட்டில் விலங்குகளையும் சேர்த்து பாடம் நடத்தினால் எப்படி? இணையத்தில் வைரலாகி ப்ளூகிராஸ் அமைப்பினரின் ரத்தத்தை கொதிக்க வைத்துக்கொண்டிருப்பது அப்படி ஒரு வீடியோதான். வீடியோவில் நாய்க்கு ஒருவர் ஏபிசி சொல்லித்தருகிறார்.

நாய் எனக்கு எதற்கு ப்ரோ ஏபிசி பாடமெல்லாம்? என தேமேயென இளைப்பாறுகிறது. விடுவாரா இளைஞர், நாய் முகத்தை கால்களால் மறைத்தாலும் விடாமல் முகத்தில் அறைந்து ஏ... ஏ, பி... பி என ஏபிசி சொல்லித்தருகிறார். முப்பது செகண்ட் வீடியோவில், மூர்க்கமான வன்முறையை விளையாட்டாக செய்தாலும் பலரிடமும் கண்டனம் குவித்து ஹிட்டாகி விட்டது.