பாதகமான பாலினமாற்றம்விசாகப்பட்டினத்தில் உள்ள இந்திய கப்பற்படையில் தனது டீன் ஏஜில் பணிக்கு சேர்ந்தார் எம்கே கிரி. நாட்கள் செல்லச் செல்ல தன் உடலில் பெண்மையை உணர்ந்தவர், 2016ம் ஆண்டு பாலின மாற்று ஆபரேஷன் செய்து ஷபி என்ற பெண்ணாக மாறினார். பணிக்கு திரும்பியவருக்கு திடீரென சிறுநீர்த்தொற்று ஏற்பட்டபோது, ஷபியின் ஆபரேஷன் விஷயம் அதிகாரிகளுக்கு தெரியவர...

கோபமானவர்கள் இரக்கமின்றி பணியை விட்டே அவரை நீக்கியுள்ளனர். ‘‘மெரிட்டில் தேர்வாகி பணிக்கு வந்தவள் நான். எதிரிகளை சமாளிக்கும் திறனுள்ள ஒருவர் ஆணாக இருந்தால் என்ன, பெண்ணாக இருந்தால் என்ன? உளவியல் சிகிச்சைக்கு பரிந்துரைத்தவர்கள் இப்போது என்னை டிஸ்மிஸ் செய்ய முயற்சி செய்து வருகின்றனர்...’’ என கண்கலங்கும் ஷபியின் விவகாரம் இந்திய கப்பல்படை சந்திக்கும் புத்தம் புதிய வழக்கு. நியாயம் கிடைக்குமா?