சூசைட் டூ சுமங்கலி பவ!- ரோனி

சினிமாவில்தான் இது சாத்தியம். ஒருவரின் லைஃபில் சிறுவயதில் மின்னல்வேகத்தில் உள்ளே வந்த பெண்ணே சில பல ஆண்டுகளுக்குப் பிறகு மனைவியாக ரீ என்ட்ரியாவது. இதை தற்செயல் என்பீர்களா? அமெரிக்காவின் இந்தியானா போலீஸைச் சேர்ந்த கெவின் வால்ஸ், தன் பள்ளியின் சம்மர் கேம்பில்தான் அந்த அழகியை சந்தித்தார். உடனே போன் நம்பர்கள் பரிமாறி, சில பல மெசேஜ்கள் மூலம் அறிமுகமாகினர்.

அதன்பின் பள்ளியில் சிலமுறை சந்தித்தாலும், தன் படிப்பில் கவனம் செலுத்தியதால், கெவின் சம்மர்கேம்ப் அழகியை சந்திக்கவில்லை. படிப்பு ஒருகட்டத்தில் கடும் மனச்சோர்வைத் தர, இனி சூசைட்தான் என முடிவெடுத்த நொடியில், புதிய எண்ணிலிருந்து போன் அழைப்பு. யெஸ். சம்மர்கேம்ப் அழகியேதான். ‘‘திடீர்னு உனக்கு போன் பண்ணணும்னு தோணுச்சு!’’ என்று சிணுங்கியவரின் குரலைக் கேட்டவருக்கு தற்கொலை எண்ணம் ஓடியே போச். இப்போது? இருவரும் கணவன், மனைவி!