நியாயத்துக்கான தூரம்!



- ரோனி

நியாயத்திற்காக எவ்வளவு தூரம் செல்லவேண்டும் என்பதை ஒடிஷா பழங்குடி மனிதர் தம் பெற்றோரோடு சேர்ந்து உலகிற்கே கூறியுள்ளார். மொரோடா கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியான கார்த்திக்சிங் மீது 2009ம் ஆண்டு எப்ஐஆர் ஒன்று பதியப்பட்டு 18 நாட்கள் லாக்கப்பில் கிடந்திருக்கிறார். ஊர் என்ன சொல்லும்? அன்னம் தண்ணீர் புழக்கமின்றி ஊர்விலக்கே செய்யப்பட்டிருக்கிறார் கார்த்திக்சிங்.

ஊர் உதவாவிட்டால் என்ன, உலகமிருக்கே என வேலை தேடிப் போகவும் வயதான பெற்றோர் பெரும் தடை. எல்லா பிரச்னைக்கும் ஒரே காரணம், போலி கேஸ் போட்ட போலீஸ்தான் என முடிவுக்கு வந்த கார்த்திக், தன் பெற்றோரை மூங்கில் கம்பில் இருபுறமும் கட்டி, உட்கார வைத்து நியாயம் கேட்க சாலையில் 40 கி.மீ நடக்க ஊரே உச்சு கொட்டியிருக்கிறது.