க்ரைம் இன்ஜினியர்எழுத்தாளர்கள், இசையமைப்பாளர்கள் லைஃபில் கண்டிப்பாக ஒரு மாஸ்டர்பீஸ் உண்டு. உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த என்ஜினியரின் வீட்டில் கிடைத்த க்ரைம் மாஸ்டர்பீஸ் பலரையும் திகிலில் ஆழ்த்திவிட்டது.  1999ம் ஆண்டு அனுபமாவை மேரேஜ் செய்து அமெரிக்காவில் வாழ்ந்த என்ஜினியர் ராஜேஷ் குலாத்தி பின்னாளில் உத்தராகண்டின் டேராடூனில் குடியேறினார். முதலில் இனித்த திருமணம், ராஜேஷுக்கு கிடைத்த பெண் தொடர்பால் கசந்துபோனது.

2010ம் ஆண்டு வாக்குவாதத்தில் ராஜேஷால் தாக்கப்பட்ட அனுபமா மூர்ச்சையாகி விழ, பீதியானவர் மின்சார ரம்பத்தால் அவரை பல பீஸ்களாக்கி பாலிதீனால் உடல் பாகங்களை கட்டி ஃப்ரீசரில் வைத்துவிட்டு, மனைவி தாய்வீட்டுக்கு சென்றுவிட்டதாக சொல்லிவிட்டார். பின் பாலிதீனை நகரின் அனைத்து மூலைகளிலும் டிஸ்போஸ் செய்தார். அனுபமாவின் சகோதரர் இவரது வீட்டுக்கு வந்தபோது மனைவியின் வெட்டுப்பட்ட தலையோடு மாட்டிக் கொண்டார். இப்போது சிறையில் இருக்கிறார் இந்த க்ரைம் என்ஜினியர்!