நிர்வாணப் பூங்காவுக்கு வாங்க!- ரோனி

‘ட்ரெஸ் எல்லாம் இப்ப வந்ததுதான். அதுக்கு முன்னாடி எவ்வளவு ஈஸியாக லைஃப் இருந்தது தெரியுமா?’ என இந்தியாவிலும் எக்ஸ்பயரியாகாத ஆதிவாசி மகாத்மாக்கள் தியரி பேசிக் கொண்டிருக்கின்றனர்.  ஃப்ரான்சில் பிராக்டிகலாக இறங்கி இதற்கென தனி பூங்காவையே ஓபன் செய்துவிட்டார்கள்! பாரீசில் நிர்வாண மனிதர்கள் உலாவித் திரிய தனி பூங்காவையே அரசு அமைத்துத் தந்துள்ளது.

The Bois de Vincennes என்ற பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த பார்க்கில் காலை 8 மணியிலிருந்து இரவு 7.30 வரை உடையற்ற பறவைகளாக ஜாலியாக நீங்கள் திரியலாம். ஆனால், அடுத்தவர்களுக்கான பிரைவசியில் நுழையக்கூடாது உள்ளிட்ட டஜன் ரூல்ஸ் உண்டு. ‘‘இயற்கை நேயர்களுக்கு இது மிகப்பெரிய சுதந்திரம், சந்தோஷமும் கூட...’’ என ஆனந்தக் கூத்தாடுகிறார் பாரீசின் நேச்சரிஸ்ட் சங்கத்தைச் சேர்ந்த ஜூலியன் கிளாட் பெனக்ரி.