எமர்ஜென்சி வெப்பன்!சப்பாத்தி சரியில்லை, சாம்பாரில் பருப்பே இல்லை என விரக்தியாகி இந்திய ராணுவ வீரர்கள் சோஷியல் மீடியாவில் புகார்களை டன் கணக்கில் அனுப்பிவரும் நிலையில், ராணுவத்தை கான்க்ரீட்டாக்க, ஆயுதசூட் ஒன்றை டிசைன் செய்துள்ளார் வாரணாசி இளைஞர் ஒருவர். ஷியாம் சௌராஸியாவுக்கு சூப்பர் ஹீரோ படங்கள் என்றால் கொள்ளைப் பிரியம். இந்திய சோல்ஜர்களை சிங்கிள் சூப்பர் ஹீரோக்களாக்க பிளான் செய்தவரின் அதிரடி கண்டுபிடிப்புதான் இந்த ஆல் நியூ ஆயுத சூட்.

இன்டர்நெட் வழியாக ஜிபிஎஸ் பயன்படுத்தி சூப்பராக ஆர்மி சூட்டை கன்ட்ரோல் செய்யலாம் ப்ரோ என படுபாந்தமாக பிராமிஸ் செய்கிறார் ஷியாம். ‘‘எல்லையில் பாடுபடும் வீரர்களுக்கு ஆர்மி சூட் பக்காவாகப் பொருந்தும். ஆராய்ச்சிக்கு அரசின் உதவி கிடைத்தால் நன்றாக இருக்கும்...’’ என்கிறார் ஷியாம்.