சீனா தானா போலீஸ் 001- ரோனி

போலீஸ் எல்லாருமே அச்சடித்தது போல வால்டர் வெற்றிவேல், வல்லரசுவாக அஞ்சாநெஞ்சர்களாக இருப்பது முடிகிற காரியமா என்ன? அமெரிக்காவின் போலீஸ்காரர் ஒருவர் அப்படி ஒரு போன் அழைப்பை ஏற்று, டாஸ்க்கை முடிக்க தொப்பி மாட்டி விறைப்பாக சென்றார். க்ளைமேக்ஸ் என்னாச்சு? தெறி காமெடி.

முதலையை வளைத்துப் பிடித்து வாயைக் கட்டுவதுதான் அந்த இளம் போலீஸ்காரருக்கு டாஸ்க். முதலில் நன்றாக கிரிப்பாகத்தான் பிடித்தார். ஆனால், திமிறிய முதலை தலைதூக்கி வாயைத்திறந்ததும் பயந்துபோன போலீஸ்காரர் பதறி எடுத்தார் பாருங்கள் ஓட்டம். ஆசம். போலீஸ் டீம் மட்டுமல்ல, அந்த வீடியோவைப் பார்த்த 8 லட்சம் பேரும் கலீர் என சிரித்துவிட்டனர். போலீஸை துரைசிங்கம் 123 என விறைப்பாக பார்த்தவர்கள், சீனாதானா 001 ஆக பார்த்ததன் எஃபெக்ட் இது.