HOT WATER சேலன்ஜ்



- ரோனி

ப்ளூ வேல் கேமில் இணைந்து பலரும் உயிரை விட்டுக்கொண்டிருக்க அடுத்த புயலாக அமெரிக்காவில் ஹாட்டாக கிளம்பியிருக்கிறது Hotwater சேலன்ஜ்! ஐஸ்பக்கெட் சேலன்ஜ் உள்ளிட்ட நோய்களுக்கான நிதி பிரசார விளையாட்டுகளைத் தாண்டி இணையத்தில் சுயவதையைத் தூண்டும் பிரசாரம் செய்யும் ட்ரெண்ட் திகுதிகுவென பரவி வருகிறது. ஹாட்வாட்டர் சேலன்ஜும் அப்படித்தான். வெந்நீரை நன்கு காய்ச்சி, நண்பர்கள் மீது ஊற்றுவதுதான் கேம் பிளான். அப்போது கை கால் வெந்துவிடுமே?

யெஸ். அப்படி கதறித் துடித்தால்தான் கேமில் அடுத்த லெவலுக்கு செல்ல முடியும். அடுத்த லெவலில் வெந்நீரை இன்னும் பல நூறு செல்ஷியசில் கொதிக்க வைக்கவேண்டும். அமெரிக்காவின் அர்கான்சா வீட்டில் தூங்கிய சிறுவனின் முகத்தில் ஓவனில் கொதிக்க வைத்த வெந்நீரைக் கொட்டி ஊரையே பதறவைத்துள்ளான் சக நண்பன். இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட 11 வயதான ஜாமோனிஷா, முகம், தோள் எல்லாம் வெந்து மருத்துவமனையில் இப்போது சிகிச்சை பெற்று வருகிறான்.