ரூபாய்



குங்குமம் விமர்சனக்குழு

பணம் சம்பாதிக்கிற முயற்சியில் திசை திரும்பினால் என்ன நேரும் என்பதே ‘ரூபாய்’. வறுமையின் கோரப்பிடியில் இருக்கிறார்கள் சின்னி ஜெயந்தும், ஆனந்தியும். வண்டியின் கடைசித் தவணைக்காக இளைஞர்கள் சந்திரன், கிேஷார் கோயம்பேடு வருகிறார்கள். வந்ததற்கு இன்னும் கொஞ்சம் வரவு வைக்கலாம் என்பதற்காக சின்னி ஜெயந்தின் வீடு மாற்றும் வேலையைச் செய்கிறார்கள்.



சுங்கச் சாவடியில் பரிசோதனையைத் தவிர்க்க சந்திரனின் வண்டியில் பணத்தை தற்காலிகமாக வைக்கிறார் ஹரிஷ். அடுத்து நடந்தது என்ன என்பதே மீதிக் கதை. சின்னிஜெயந்த், ஆனந்தி வாழ்க்கை அவ்வளவு யதார்த்தம். வண்டியிலேயே பயணமாகும் சந்திரன் - ஆனந்தி யின் காதல் கதை மகா எளிமை.  துடிதுடிப்பில் புதுமுகம் கிஷோர் எகிறுகிறார்.

எந்த சமரசத்தின் வழியும் செல்லாமல் நாட்டிற்கான ஒரு நல்ல செய்தி பகிர்விற்காகவே இயக்குநர் எம்.அன்பழகனுக்கு வணக்கம். நெடுஞ்சாலையின் தீராத ஓட்டத்தில் வி.இளையராஜாவின் கேமரா கதை சொல்கிறது. இமானின் இசையில் பாடல்கள் சிறப்பு, பின்னணியில் வேகம். எளிய மனிதர்கள் மேலான அக்கறையைத் தூவி, எச்சரிக்கை செய்கிறது இந்த ‘ரூபாய்’.