அதிசய ட்வின்ஸ்!



ரோனி

மனித உயிரைக் காப்பாற்றுவது டாக்டர்களின் தர்மம். என்றாலும் கருப்பையில் உடலுக்கு உயிர் தந்து காப்பாற்றும் தாய்க்கு நிகராக இந்த உலகில் யாரைக் கூற முடியும்? பிரேசிலைச் சேர்ந்த ஃபிராங்கிளின் படில்ஹாவுக்கு திருமணமாகி, அன்பின் பரிசாக வயிற்றில் குழந்தைகள் வளரத் தொடங்கி 9 வாரங்களாகியிருந்தன.



அப்போதுதான் அவருக்கு மூளைப் புற்றுநோய் பாதிப்பு இருக்கும் செய்தி இடியாக இறங்கியது. மனைவியைக் காப்பாற்ற முடியாது. அவள் வயிற்றிலுள்ள குழந்தையை மட்டுமாவது காப்பாற்ற முடியுமா? படில்ஹாவின் கணவர் கண்ணீரோடு டாக்டர்களிடம் கெஞ்சினார். நோயின் பாதிப்பால் படில்ஹா கொஞ்சம் கொஞ்சமாக இறந்து கொண்டிருந்தாலும், அவரது கருப்பையில் எந்தவித பாதிப்புமின்றி குழந்தைகள் வளர்ந்து வந்தன.

மருந்துகளின் மூலம் இறுக்கிப்பிடித்திருந்த படில்ஹாவின் உயிர் பிரிந்தபோது -ட்வின்ஸ் ஆரோக்கியத்துடன் பிறந்தன. தன் இறப்பிலும் குழந்தைகளை 120 நாட்கள் போராடி படில்ஹா காப்பாற்றியதுதான் மெடிக்கல் வட்டாரங்களில் இன்று மிராக்கிள் ஸ்டோரி.