மட்டன் சமோசா லட்சாதிபதி!



ரோனி

எம்பிஏ படித்தவருக்கு என்ன லட்சியம் இருக்கும்? நல்ல வேலை. உடனே இஎம்ஐயில் அபார்ட்மெண்ட். பிறகு ஏரியா அசரும் அட்டகாச அழகியை திருமணம் செய்து கொள்வது. வரதட்சணையில் விலை உயர்ந்த காரை வாங்கி பவனி வருவது. ஆனால், முனாஃப் கபாடியா வேறொன்றை செய்திருக்கிறார்.  



மும்பையின் நர்சிமோன்ஞ்சி யுனிவர்சிட்டியில் எம்பிஏ படித்தவர் கூகுள் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். சமையலில் கலக்கும் தன் அம்மாவின் திறமையை உலகம் அறிய என்ன செய்யலாம் என ரூம் போட்டு யோசித்தார். அப்போது மண்டையில் எரிந்த பல்புதான் ‘போரி கிச்சன்’. சனி, ஞாயிறு மட்டும் இயங்கும் இந்த ரெஸ்டாரெண்ட்தான் இன்று மும்பையின் செம ஹாட் ஸ்பாட்.

விளைவு, ‘ஃபோர்ப்ஸ்’ பத்திரிகையின் 30 வயதுக்குட்பட்ட சாதனையாளர்கள் லிஸ்ட்டில் துண்டு போட்டு இடம் பிடித்து விட்டார். தன் மட்டன் சமோசாவை விற்று முனாஃப் சம்பாதித்தது எவ்வளவு தெரியுமா? ஜஸ்ட் 50 லட்சம் ரூபாய்கள்!