உலகம் சுற்றிய தம்பதி!



ரோனி

வேலையில் கான்சென்ட்ரேஷன் செய்து எங்காவது ஜாலி டூர் அடிக்கலாம் என யோசனை வரும்போதே தலையில் சால்ட் அண்ட் பெப்பர் ஸ்டைல் வந்துவிடுகிறது. அந்த வயதிலும் மனைவியோடு பிளான் போட்டு ஊர் சுற்றுவது சாதனைதானே! மும்பையைச் சேர்ந்த பல்தவா தம்பதியினரின் மும்பை டூ லண்டன் சாதனை இந்த கேட்டகிரிதான். மும்பையைச் சேர்ந்த பல்தவா தம்பதிகள், மார்ச் மாதம் 23 அன்று லெமன் நசுக்கி BMW காரில் கியர் போட்டு கிளம்பிய 72 நாள் டூர் இது.



19 நாடுகளை சாலைவழியாக கடந்து சென்று இறுதியாக லண்டன் சென்று சேர்ந்தபோது 22 ஆயிரத்து 200 கி.மீ தூரத்தை கடந்திருந்தனர். கர்நாடகாவை பூர்வீகமாகக் கொண்ட பல்தவா, சார்ட்டர்ட் அக்கவுன்டன்டாக செட்டிலானது மும்பையில். அட்வென்ச்சர் பயணங்கள் இவரது ஸ்பெஷல் ஹாபி. ‘‘கடந்த ஆண்டு போட்ட பிளான் இது. இம்பால் வழியாக லண்டன் சேர்வது சேஃப் என முடிவு செய்து சாதித்துவிட்டோம்!’’ புன்னகைக்கிறார் பல்தவா.