உலகின் இளம் விமானி!



ரோனி

எஞ்சினியர், டாக்டர் டிகிரியுடன்தான் குழந்தை பிறக்க வேண்டும் என்பது இந்தியப் பெற்றோர்களின் லட்சியம். அப்படியிருக்க ‘ஃபிளைட் ஓட்டணும்’ என்கிற பிள்ளைகளின் கனவு நிறைவேறுமா? இதுதான் அனன்யா திவ்யாவை போயிங் விமானத்தை ஓட்டவும், நம்மை ஈ ஓட்டவும் வைத்திருக்கிறது. பஞ்சாப் பதன்கோட்டில் பிறந்த அனன்யா, ஆர்மி குடும்ப வாரிசு. சிறுவயதிலேயே ஆந்திராவுக்கு ஷிப்ட் ஆகியவர். கலாசார வேறுபாடு, மிடிஸ் கிளாஸ் பொருளாதாரம், இங்கிலீஷ் தடுமாற்றம் என எதிர்நீச்சல் அடித்தார்.



விளைவு, இன்று வெறும் விமானம் ஓட்டவில்லை; போயிங் 777 வில் ரைட் லெக் ஓட்டுகிறார். இந்த ரக விமானத்தை உலகில் ஓட்டும் மிக இளம் வயது கமாண்டர் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார். ‘‘நான் பைலட் கோர்ஸ் எடுத்தபோது இந்த படிப்பு அவ்வளவு பாப்புலராகவில்லை. யாருக்கும் நம்பிக்கை இல்லை. ஆனால், எனக்கு பறப்பது பிடிக்கும் என்பதால் உறுதியுடன் படித்து ஜெயித்தேன்!’’ என்கிறார் இந்த பஞ்சாப் கமாண்டர்.