ஆழ்ந்த ரிசர்ச்!
ரீடர்ஸ் வாய்ஸ்
பழமார்நேரி பஞ்சாயத்து கலையரசன், தன் கிராம பொடிசுகளோடு செய்யும் கலைப்பணி அட்டகாசம். - ராம.கண்ணன், திருநெல்வேலி. சண்முகராஜ், சென்னை.
மெக்கட்ரானிக்ஸ் வைஜெயந்தியின் ரோபோடிக்ஸ் சாதனை அருமை. அதோடு, ஆர்வமுள்ள மாணவர்களுக்கு அதனைக் கற்றுக்கொடுப்பது பரவச செய்தி. - ப்ரீத்தி, செங்கல்பட்டு. சத்தியநாராயணன், சென்னை. மனோகர், கோவை.
தேவாலயம் குறித்த ஆழ்ந்த ரிசர்ச், எழுத்துக்களிலும் படங்களிலும் பளீரென தெரிகிறது. தொன்மை தேவாலயங்களின் வரலாறு சொன்னது மனதுக்கு மகிழ்வு, நிறைவு. - த.சத்தியநாராயணன், சென்னை. சைமன் தேவா, விநாயகபுரம். சங்கரநாராயணன், திருநெல்வேலி. மனோகர், கோவை. சண்முகம், திருவண்ணாமலை. வண்ணை கணேசன், சென்னை.
பாட்டி கதை சொல்லும் அனுபவத்தை தவறவிட்ட நவீன ஜெனரேஷனுக்கு வேலு மாமா வரப்பிரசாதம். பாலசாகித்திய விருது பெற்ற அவருக்கு வாழ்த்துகள். - மனோகர், கோவை. சண்முகம், திருவண்ணாமலை. சத்தியநாராயணன், சென்னை. நவீன்சுந்தர், திருச்சி. லட்சுமி நாராயணன், வடலூர். அத்விக், அசோக்நகர். இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

வள்ளலாரையும் வள்ளுவரையும் ‘இளைப்பது சுலபம்’ தொடரில் எக்ஸாம்பிள் காட்டியிருக்கும் பா.ராகவனின் எழுத்து ஸ்லிம் ஃபிட் ஸ்மார்ட். - வெ.லட்சுமி நாராயணன், வடலூர்.
கலப்பட பால் பிரச்னையில் ஊரே அரண்டு கிடக்கும்போது நல்ல பாலும் கெடுதல்னு புது குண்டு வீசி மிரள வைக்கிறீங்களே பாஸ்! - சங்கீத சரவணன், மயிலாடுதுறை. தியாகராஜன், கீழ்வேளூர். சுப்பிரமணியன், திருச்சி. மயிலை கோபி, அசோக்நகர்.
‘கவிதை வன’த்தில் ஆண்டன் பெனி எழுதிய ‘சாயல்’ நெகிழ்ச்சியின் உச்சம். - விஜயநிர்மலன், சென்னை.
யுகபாரதியின் ‘ஊஞ்சல் தேநீரி’ல் நடிகர் திலகத்தின் பாத்திரத்தை மறுத்து எஸ்.எஸ்.ஆரின் பாத்திரத்தை தேர்ந்தெடுத்த குருதத்தின் நேர்மை நெகிழவைத்தது. - சிதம்பரகுருசாமி. அசோக்நகர்.
கோலிவுட்டின் புத்தம் புது ஹாட் குயின்களை எங்களுக்கு அறிமுகப்படுத்திய ஸ்டைல் அருமை, பெருமை! இளசுகளை தூங்கவிடாமல் செய்த சாபம் உங்களைத்தான் சேரும். - அரங்கநாதன், புதுச்சத்திரம். சண்முகராஜ், சென்னை. சங்கீத சரவணன், மயிலாடுதுறை. பூதலிங்கம், நாகர்கோவில்.
தென்காசி சரவணமுத்துவின் கழிப்பறை கட்டில் பாராட்ட வேண்டிய அவசிய கண்டுபிடிப்பு. - சைமன் தேவா, சென்னை. பூதலிங்கம், நாகர்கோவில். நவீன்சுந்தர், திருச்சி. வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு
|