ரூம் கிடையாது!



ரோனி

வாடகைக்கு அறை பேசும்போது வீட்டு ஓனர் நம்மிடம் சிங்கிளா, வெஜ்ஜா, என்ன வேலை என்பதெல்லாம் கேட்பதில் லாஜிக் இருக்கிறது. ஆனால், லாட்ஜில் இதெல்லாம் கேட்பது கொஞ்சம் ஓவர்தானே? அண்மையில் சஃபீக் ஹக்கீம்-திவ்யா என்ற கேரளத் தம்பதிகள் வேலை விஷயமாக பெங்களூருவுக்கு வந்தனர். அங்கு சுதாமா நகரிலுள்ள ஆலிவ் ரெசிடென்சியில் அறையை புக் செய்யும் போது, ரிசப்ஷனிஸ்ட் ‘முஸ்லீம்களுக்கு ரூம் கிடையாது’ என மூஞ்சியில் அடித்தது போல் பேசிவிட்டார்.



ஹக்கீம், திவ்யா என இருவரின் ஐடிக்களை வாங்கிப் பார்த்தபின் இதனை திருத்தமாகக் கூறியிருக்கிறார். பைகளோடு தவித்த தம்பதிகள் வேறு ஹோட்டல் பார்த்துக் கொண்டு சென்றுவிட்டனர். எனினும் இதற்கான காரணத்தை ரிசப்ஷனிஸ்ட் மறைக்காமல் கூறிய ஹானஸ்ட் முக்கியம். ‘‘முஸ்லீம், கன்னடர்கள் என்றால் உள்ளே விடாதே என்று போலீஸ் கூறியிருக்கிறது. முஸ்லீம்கள் அறையில் தூக்குப்போட்டுக் கொண்டால் என்ன செய்வது?’’