டிராஃபிக் யோகா



-ரோனி

அடிக்கிற வெயிலிலும், நகரவே நகராத டிராஃபிக்கிலும் மண்டையில் இன்ஸ்டன்டாக உதிக்கிற கருத்துக்களை ட்விட்டர், ஃபேஸ்புக்கில் செதுக்குவதுதானே நம் ஆட்களின் வழக்கம். ஆனால், வெளிநாட்டுக்காரர்கள் டிராஃபிக்கில் சிக்கினால் என்ன செய்வார்கள்? யோகாவே செய்து காட்டியிருக்கிறார் அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த கிரிஸ்டன் ஜார்ன்ஸன் என்ற பெண்மணி.

ஏன் இந்த முயற்சி? காரில் சென்று கொண்டிருந்த கிரிஸ்டனை திடீரென போலீசார் நிறுத்தி, விபத்து நடந்திருப்பதால் சாலையில் போக்குவரத்து தடைபட்டிருக்கிறது என்று கூறியிருக்கின்றனர். கார்கள் அடைத்துக் கொண்டு தேமேயென்று ரோட்டில் நிற்க - தரைவிரிப்பை எடுத்து ஹைவேஸில் நிதானமாக விரித்துப்போட்டு யோகா செய்ய ஆரம்பித்துவிட்டார் கிரிஸ்டன். அப்புறம் என்ன? ஊரே கூடி கிரிஸ்டனின் யோகா போஸ்களை கிளிக் செய்யத் தொடங்கி விட்டனர்!