விருந்துக்கு ரெடி!
காவிரிக்கு கர்நாடகத்திடமும், முல்லைப்பெரியாறுக்கு கேரளாவிடமும் கையேந்தி இருக்கும் நிலையில், ‘பருவமழை கூடுதலாகப் பெய்யும்’ என்ற வெதர்மேன் தகவல் சிறிது ஆறுதல். -வி.எழில்மாறன், திருநெல்வேலி.
 சூர்யாவின் காக்கி டிரஸ் ஷார்ப் லுக்கிலும், ஹரியின் புல்லட் வேக படபட ஸ்க்ரீன்ப்ளேயிலும் ‘எஸ் 3’ குளோபல் ஆக்ஷன் விருந்துக்கு நாங்களும் ரெடி. - கி.தயாளன், புதுச்சேரி.
‘சென்னை -28’ ரீயூனியன் யூத் பட்டாளத்தின் ஸ்டில்களில் பொங்கும் எனர்ஜியில், படம் ஷ்யூர் இன்னிங்ஸ் வெற்றிதான். - அ.ராமமூர்த்தி, திருப்பூர்.
‘முகங்களின் தேசம்’ பகுதியில் நில, மொழி வேறுபாடுகளைக் கடந்து வரலாற்றின் நிஜ முகங்களை தரிசிக்கும் உள்ளார்ந்த நிறைவு ஏற்படுகிறது. - மு.பிரபுதிருமால், திண்டுக்கல்.
பேசுவதைவிட கவனித்துக் கற்பதே வாழ்வு என்ற விஜய்சேதுபதியின் ‘டவுன்லோடு மனசு’, சக்சஸ் சீக்ரெட். - பி.குணசேகரன், கோவை.
தியேட்டர் தாண்டி படத்தை மனதில் நிற்க வைக்கும் அனலைஸ் சர்வீஸுக்கு பிளஸன்ட் ஆரத்தி. - ஆர்.பழனிச்சாமி, விழுப்புரம்.
புறக்கணிப்பின் கசப்புகளைப் புறம் தள்ளிவிட்டு, தளராமல் பலரையும் பாக்ஸர்களாக்க போராடி வரும் செந்தில்நாதனின் கதை, டாப் கியர் இன்ஸ்பிரேஷனல். - வி.அசோக்ராஜா, சென்னை-4.
பர்சுக்கு சூடு வைக்காத லைட் விலையில் ஜெனரிக் மருந்துகளா? அரசு முன்முயற்சியோடு அமல்படுத்த வேண்டிய திட்டம் இது. - ஏ.குமரேசன், திருவாரூர்.
சமூக அக்கறையோடு தொழிலை ஒரு தவமாகக் கருதிச் செய்த வழக்கறிஞர்களின் வரலாற்றைப் பேசும் ‘தமிழ்நாட்டு நீதிமான்கள்’ தொடர் அமர்க்கள உற்சவம். - டி.பி.சிவசாமி, திருச்சி.
‘உயிரமுது’ நம் பாரம்பரிய உணவுகளை மீண்டும் நம் சமையலறையில் மணம் வீசச் செய்யட்டும்! - கே.பனிமலர், கரூர்.
அண்ணன் அறிவுமதியின் ‘நட்பு மொழி’ காலத்தில் விளைந்திருக்கும் கவிதை மூலிகை. ஆண்-பெண் நட்பு சுவாசம் போல் இயல்பானதாக மலர்ந்து மணம் வீச சிந்தித்துச் செதுக்கி இருக்கிறார். பேரிலக்கியங்கள் என்பவை பக்கம் பக்கமாகத்தான் எழுதப்பட வேண்டும் என்று இல்லை. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்கிற ஒற்றை வரிதான் உலகை ஆள்கிற உயர்ந்த இலக்கியம். கவிஞர் அறிவுமதியின் ஒரு வரிக் கவிதைகள் பல, அப்படிப்பட்ட ஒளி வீசும் சின்னச் சின்ன வான் துண்டுகள். - பிருந்தா சாரதி, திரை எழுத்தாளர்.
|