கமென்ட் கோயிந்து
சக்திவேல் மருதமுத்து
பெங்களூருவில் ஏ.டி.எம். இயந்திரங்கள் மூலம் தங்க நகைகள் விற்பனை: செய்தி ஏ.டி.எம் மெஷின்ல வர்ற பணத்துல கள்ளநோட்டு கலந்து வர்ற மாதிரி, ஏ.டி.எம் நகையில கவரிங் நகை கலக்காம இருந்தா சரி!
 உளுந்தூர்பேட்டைக்கு பணத்துடன் வந்த 3 கன்டெய்னர் லாரிகள்: செய்தி மதுரையிலருந்து எனக்கு மாமனாரு அனுப்புன தீபாவளி சீரா இருக்கும் போல... ரூட்டு தெரியாம அங்க போயிட்டானுக!
தொழில் செய்வதற்கு ஏற்ற நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 130வது இடம்: உலக வங்கி சத்தமா சொல்லாதீங்கய்யா... நம்பர் 1 இடத்துக்குக் கொண்டுட்டு வர்றேன்னு இன்னும் இருவது முப்பது அணு உலைய தொறந்து வுட்ற போறாய்ங்க!
தீபாவளி மது விற்பனை ரூ.250 கோடி: செய்தி பாட்டில் வெலைக்கு மேல அஞ்சு ரூவா சேர்த்து வச்சி வாங்குனதையும் கணக்குல கூட்டுங்க ஆபீசர்... இன்னும் பல கோடி வரும்!
போதகர் வீட்டில் 70 பவுன் நகை திருடிய அவரது மகனை போலீஸ் கைது செய்தது: செய்தி சாத்தானை வீட்டுக்குள்ளயே வச்சிட்டு ஊருக்குள்ள தேடிருக்காப்டி!
முதல்வர் நலமாக வேண்டி 108 தேங்காய் உடைத்தார் நத்தம் அங்கங்க ஐயாயிரம், பத்தாயிரம்னு பால் குடம் எடுக்குறாய்ங்க. இப்பதான் இவரு 108 தேங்கா வச்சி சட்னி ஆட்டிட்டு இருக்காரு!
ஓவியங்கள்: கண்ணா
|