நட்பு மொழி
அறிவுமதி
* உனக்கு ஆண் நண்பரே இல்லையாம்மா என்றேன் தாவணி தடுத்துவிட்டது மகளே என்றாள் அம்மா
 * இருவரும் என்ன காதலர்களா என்று கேட்கிற உலகில்தான் நண்பர்களாக இருக்கிறோம்
* திருமணத்திற்கு முன்பு சரி இனி வேண்டாம் என்று சொல்கிற ஆணோ பெண்ணோ கொலை செய்கிறார்கள் மூன்று மனசுகளை
* நண்பர்களைக் குழந்தைகளாகப் பார்க்கத் தெரியாதவர்களின் குழந்தைகள் பாவப்பட்டவர்கள்
* அய்ந்தாறு ஆண்களோடு பேசிப் போகிற பெண்ணைப் பார்க்க கழுவிய கண்கள் வேண்டும்
* காமத்திற்கு அறை நட்புக்கு வானம்
-ஓவியம்: ப்ரத்யூஷ்
|