jokes



‘‘மாப்பிள்ளை என்ன ஜோலி பார்த்துட்டு இருக்கார் தரகரே..?’’
‘‘ஹி... ஹி... எப்பவும் ‘ஏஞ்சலினா ஜோலி’ படத்தைப் பார்த்து ஜொள்ளு விட்டுட்டு இருப்பாரு!’’

‘‘வளைச்சு வளைச்சு எதிர்க்கட்சிக்காரங்க என்னை எதுக்குய்யா போட்டோ எடுக்குறாங்க..?’’
‘‘மீம்ஸ் தயாரிக்கவாம் தலைவரே!’’

‘‘தலைவர் ஏன் செம கடுப்பா இருக்கார்..?’’
‘‘குற்றப் பத்திரிகையிலயும் அவரைக் கிண்டல் செய்து ஆங்காங்கே மீம்களை போட்டு விட்டுருக்காங்களாம்!’’

‘‘தலைவரோட பேரப் பிள்ளைங்க எல்லாரும் ‘டாம் அண்ட் ஜெர்ரி’ பாத்துட்டு சந்தோஷமா இருக்காங்க... தலைவர் மட்டும் ரொம்ப சோகமா இருக்காரே, ஏன்..?’’
‘‘அதுக்கு ‘மீம் அண்ட் வொர்ரி’தான் காரணமாம்!’’

- கே.லட்சுமணன், திருநெல்வேலி.