குங்கும்ம டாக்கீஸ்



* தெலுங்கில் பாலகிருஷ்ணாவின் 100வது படம், வரலாற்றுப் படமாகத் தயாராகிறது. ஜோடியாக நயன்தாராவைப் பேசி வந்தார்கள். இப்போது ஸ்ரேயா முடிவாகியிருக்கிறார். ‘வானம்’ பட இயக்குநர் கிரிஷ் இயக்கும் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் ஹேமமாலினி நடிக்கிறார்.



* பாலிவுட் ஆசை இல்லையா?’’ என சமந்தாவிடம் கேட்டால், ‘‘இந்தியில் நடிக்க தயக்கம் இல்லை. ஆனால், தமிழ், தெலுங்கில் நடிக்கவே நேரமில்லை. சரியான வாய்ப்பு வந்தால், எந்த மொழியிலும் நடிக்க ரெடி!’’ என்கிறார் சமந்தா.

* ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘2.0’ ஷூட்டிங் நூறு நாட்களைக் கடந்திருக்கிறது. ‘‘க்ளைமேக்ஸோடு சேர்த்து 2 சண்டைக்காட்சிகள் ஓவர். படத்தில் 50 சதவிகிதம் முடிந்திருக்கிறது’’ என சந்தோஷிக்கிறார் ஷங்கர்.

* ‘லிங்கூ’ என்ற பெயரில் கவிதைகள் எழுதிய இயக்குநர் லிங்குசாமி, இப்போது ‘லிங்கூ 2’ வெளியிட்டிருக்கிறார். இந்த முறை கவிதைத் தொகுப்புக்குப் பெயர் ‘செஃல்பி எடுத்துக்கொள்கிறது மரம்’. வெளியீட்டு விழாவுக்கு கவிக்கோ அப்துல் ரகுமான், பார்த்திபன், ராஜுசுந்தரம், பாலாஜி சக்திவேல் என லிங்குசாமியின் நெருங்கிய நண்பர்கள் வந்திருந்து வாழ்த்தினார்கள்.

* பழம்பெரும் ஹாலிவுட் கவர்ச்சிப் புயல் மர்லின் மன்றோவின் 90வது பிறந்த நாள் விழாவை பிரமாண்டப்படுத்திவிட்டது ஹாலிவுட். லண்டன், அயர்லாந்து, லாஸ் ஏஞ்சல்ஸ் என உலகம் முழுக்க நடந்த இந்த விழாக்களில் மர்லின்  பயன்படுத்திய  லிப்ஸ்டிக், எழுதிய கடிதங்கள், காலணிகள் ஏலத்தில் விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

* ‘சார்லி’ மலையாள ரீமேக்கில் நடிக்க தனுஷ், விஷால் ஆசைப்பட, வாய்ப்பு மாதவனுக்குப் போய்விட்டது. விஜய் இயக்குகிறார்.

* நிவின் பாலி நடித்து வரும் தமிழ்ப் படத்தில் முக்கியமான கேரக்டரில் ஒருவர் முதன்முறையாக நடிக்கிறார். அவருக்கு அங்கே வழக்கத்தைவிட மரியாதை, உபசரிப்பு, கவனிப்பு. அவர் வேறு யாருமில்லை... விஷாலின் அப்பா ஜி.கே.ரெட்டி.

* ‘பாகுபலி’ படத்தின் க்ளைமேக்ஸுக்கு மட்டும் 30 கோடி பட்ஜெட் போட்டிருக்கிறார்கள். அதை மட்டும் 25 நாட்கள் படமாக்குகிறார்கள்.

* இதுவரை வெறும் 29 ட்வீட்கள் மட்டுமே போட்டிருக்கும் ரஜினியின் ட்விட்டர் பக்கத்தை 30 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள். ‘கபாலி’ ரிலீஸ் சமயத்தில் இன்னும் ஃபாலோயர்ஸ் கூடுவார்களாம்.

* ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ ஷூட்டிங்கிலேயே கௌதம் மேனன் மறுபடியும் ஒரு கதை சொல்ல, மறுபடியும் அவருக்கே கால்ஷீட் கொடுத்துவிட்டார் தனுஷ். ஆச்சரியத்தில் மிதக்கிறார்கள் தமிழ் சினிமாக்காரர்கள்.

* விஜய் இந்தப் பிறந்தநாளை பரதன் இயக்கும் படப்பிடிப்பில் கொண்டாடுகிறார். நாலா பக்கங்களிலிருந்தும் ரசிகர்கள் புறப்பட வேண்டாம். இந்தப் பிறந்தநாளுக்கு அவர் சென்னையில் இல்லை.