வலைப்பேச்சு



ஹோட்டல்ல சாப்பிட்டுட்டு பணம் கொடுக்கலைன்னா மாவாட்ட சொல்ற மாதிரி, பேங்க்ல லோன் வாங்கிட்டு பணத்த கட்டலைன்னா பேங்க்ல வேலை கொடுத்தா நல்லா இருக்கும்ல!
- மோகன் குமார்

@i_rajtuty 
கேப்டன் எத்தனை அடி விழுந்தாலும் திரும்ப எழுந்து அடிப்பார் - பிரேமலதா
# இப்ப அடிச்சது வாக்காளப் பெருமக்கள், அவங்களையா திருப்பி அடிக்கப் போறார்!?



 ‏@i_rajtuty 
நாராயணசாமி செய்ய வேண்டிய வேலையை எல்லாம் கிரண் பேடி செஞ்சிட்டு இருக்காரே, அப்ப நாராயணசாமி என்ன செய்வார்!?

எங்கே ஷாப்பிங், டூர் போவதாக இருந்தாலும், என் குழந்தையை மாமியார் பார்த்துக்கணும்; மாமியார் குழந்தையை நான் பார்த்துக்குவேன்...
- வினோத் பழனிச்சாமி

@kiramaththan 
பின் என்றோ ஒரு நாளில், ‘அதெல்லாம் ஒரு பொற்காலம்’ என சொல்லப் போகும் இந்நாளை வெகு சாதாரணமாய்க் கடந்து கொண்டிருக்கிறேன்!

‘‘இளவரசி... அந்த டீ கிளாஸை சீக்கிரம்
கழுவுமா!’’
# டீக்கடையில் கேட்டதில் வலித்தது
- இன்பா வினோத்

@ItzVillan 
தனியார் பஸ்களுக்குப் போட்டியாக அரசு பஸ்களில் செய்யப்பட்டுள்ள ‘ஸ்லீப்பர் கோச்’!



@ikrthik 
காதல் பலருக்கும் மனவாழ்க்கையாக மட்டுமே வாய்த்திருக்கிறது.

நம்மை உயரமான இடத்துல வச்சிப் பாக்க ஆசைப்படுறது ரெண்டு பேருதான்... ஒண்ணு, நம்மள பெத்தவங்க; இன்னொண்ணு ரயில்ல நம்ம லோயர் பெர்த்த கேக்குறவங்க..!
- பொம்மையா முருகன்

‏@GunaSeaker 
‘‘அந்த பையனுக்கு பொண்ணு குடுக்க  ஏன் இத்தனை பேர் போட்டி போடுறாங்க?’’
‘‘அது ஒண்ணுமில்லக்கா! அந்த பையனுக்கு ஒரு ஏக்கர் தக்காளித் தோட்டம் இருக்குதாம்!’’

@vinodhkrs 
‘‘அது ஏன்டா என்ன பாத்து அந்தக் கேள்வி கேட்ட?’’
# அம்மா டெல்லி போறாங்களே, பைலட் உட்காந்துட்டே ஓட்டுவாரா? இல்ல, நின்னுட்டு ஓட்டுவாரா?ன்னு கேக்குறாங்க

‘மவுசு’ இல்லை என்றாலும் விலை போகும் பொருள், லேப்டாப்...
- கபிலன்

29 கோரிக்கைகள் அடங்கிய 96 பக்க மனுவை பிரதமரிடம் அளித்தார் தமிழக முதல்வர்
# ‘‘ஒண்ணும் கவலைப்படாம போங்க... இத பத்தி நான் அமெரிக்கால பேசுறேன்!’’
- ரிட்டயர்டு ரவுடி

பாளையங்கோட்டை பஸ் ஸ்டாண்டில் சில்லறை மாற்றப் போனவன் முதல் ஒரிஜினல் சாந்தி அல்வாக்கடையில் கேட்டான்... இரண்டாவது ஒரிஜினல் சாந்தி அல்வாக்கடையிலும் கேட்டான்... மூன்றாவது ஒரிஜினல் சாந்தி அல்வாக் கடையிலும் கேட்டான்... நான்காவது ஒரிஜினல் சாந்தி அல்வாக்கடையிலும் கேட்டான்... ஐந்தாவது ஒரிஜினல் சாந்தி அல்வாக் கடையிலும் கேட்டான்... ஆறாவது ஒரிஜினல் சாந்தி அல்வாக்கடையிலும் கேட்டான்... ஏழாவது ஒரிஜினல் சாந்தி அல்வாக்கடையிலும் கேட்டான்... அதற்கு மேல் போக சலித்து, திரும்பி விட்டான்!
- ஜீவா நந்தன்

தக்காளி கிலோ 100 ரூபாயா நம்ம ஊருல? சவூதில இருந்து தக்காளி கம்மி விலைக்கு எக்ஸ்போர்ட் செய்யவா?
விவசாயமே இல்லாத ஊருல நம்ம ஊரைவிட தக்காளி விலைகம்மிதான். நம்ம ஊரு எங்க போகுது! விலைவாசி எங்க போகுது?
- விமலா சஞ்சீவ்குமார்

@9pocfEysiyqjZId 
தமிழ்நாட்டுலயே அதிக ஃபாஸ்ட்டா போற வண்டி, ஆம்புலன்ஸ் வண்டி; ரெண்டாவது ஃபாஸ்ட்டா போறது, அதுக்குப் பின்னால போற வண்டி!

@Kozhiyaar 
‘இட்லியா, தோசையா’ என குழம்பிக் கொண்டிருந்த நம்மை, ‘பீட்சாவா, பர்கரா’ என குழம்ப வைத்ததில் உள்ளது ஓர் ஆழமான பொருளாதார அரசியல்!

@thoatta 
இந்தியன் ரயில்வேவும் தமிழக அரசும் நடக்கிறதே சரக்குக் கட்டணத்துலதான்!

@palanikannan04  
சொகுசான வாழ்க்கை என்பது ‘சொகுசு பஸ்’ போன்றது, அடிபட்டுட்டா ஓடாது; கஷ்டமான வாழ்க்கை என்பது ‘டவுன் பஸ்’ போன்றது, அடிபட்டாலும் ஓடிக்கிட்டே இருக்கும்...

குழந்தை வளர்ப்பில் தற்போது முக்கியமான வேலை, குழந்தைகளிடம் இருந்து செல்போனை பிரிப்பதாகத்தான் இருக்கிறது.
- சக்தி சரவணன்

@ChainTweter 
ஸ்கூல் டீச்சருக்குப் பிறகு நம்ம எங்க, யார் பக்கத்துல உட்காரணும்னு முடிவு பண்றது ஷேர் ஆட்டோக்காரன் மட்டும்தான்.

@Eakalaivan 
பேரு தெரிஞ்ச ஒரு சாப்பாட்டை செஞ்சா, அவரு பேரு ‘குக்’; சாப்பாட்டை மொதல்ல செஞ்சு அதுக்கப்புறமா ஒரு பேரை வச்சா, அவரு ‘செஃப்’!

வாழ்க்கையில் நம்மை நம்பி இருப்பவர்களுக்கு நாம் செய்யும் நம்பிக்கை துரோகம்... ஹெல்மெட்‬ அணியாமல் வண்டி ஓட்டுவதுதான்!
- மா கோ

* என் மனைவி என்னை பாத்ரூமில் நின்று ‘‘என்னங்க’’ என்று அழைத்தால், பல்லி அடிக்க என்று அர்த்தம்
* ஹோட்டலில் ‘‘என்னங்க’’ என்று அழைத்தால், ‘பில்லை கட்டு’ என்று அர்த்தம்
* கல்யாண வீட்டில் ‘‘என்னங்க’’ என்றால், ‘தெரிந்தவர் வந்திருக்கிறார், வா’ என்று அர்த்தம்
* துணிக்கடையில் நின்று ‘‘என்னங்க’’ என்றால், ‘தேடிய புடவை கிடைத்து விட்டது’ என்று அர்த்தம்
* வண்டியில் செல்லும்போது ‘‘என்னங்க’’ என்றால், ‘பூ வாங்க வேண்டும்’ என்று அர்த்தம்
* மருத்துவமனையில் ‘‘என்னங்க’’ என்றால், ‘டாக்டரிடம் பேச வேண்டும்’ என்று அர்த்தம்
* வெளியே பார்த்து ‘‘என்னங்க’’ என்றால், ‘அறியாத ஆள் வாசலில்’ என்று அர்த்தம்
* பீரோ முன் நின்று ‘‘என்னங்க’’ என்று அழைத்தால், ‘பணம் வேண்டும்’ என்று அர்த்தம்
* சாப்பாட்டை எடுத்து வைத்து ‘‘என்னங்க’’ என்றால், ‘சாப்பிட வர்றியா? இல்லை, லேப்டாப்பை உடைக்கவா?’ என்று அர்த்தம்
* கண்ணாடி முன் நின்று, ‘‘என்னங்க’’ என்றால், ‘நகை அழகா?’ என்று அர்த்தம்
* நடக்கும்போது ‘‘என்னங்க’’ என்றால், ‘விரலைப் பிடித்துக்கொள்ளுங்கள்’ என்று அர்த்தம்
* கடைசி மூச்சின்போது ‘‘என்னங்க’’ என்றால், ‘என்னையும் அழைத்துச் செல்லுங்கள்’ என்று அர்த்தம்!

தயவுசெய்து யாரும் மோடியை விமர்சிக்க வேண்டாம் என கமிட்டி சார்பா கேட்டுக்கறோம். அப்புறம் கோவத்துல, கொண்டாந்த அணு உலைய நம்ம தலைல இறக்கிடுவாரு!
நெருப்புடா...
- திப்புசுல்தான் கே

‘‘இன்டர்வியூவுல ரொம்ப கஷ்டமான கேள்வியைக் கேட்டுட்டாங்க...’’
‘‘அப்படி என்ன கேட்டாங்க?’’
‘‘பிரதமர் நரேந்திர மோடி இப்போ எந்த நாட்டுல இருக்கார்னு கேட்டாங்க!’’

@kEdi_kRRisH 
நாம தங்கிருக்குற ஏரியால ‘சேஃப்டி’ இருக்கான்னு பாத்தா, அது ஃபேமிலிமேன்; ‘ஸ்கூட்டி’ இருக்கான்னு பாத்தா, அது பேச்சுலர்!

நாம லவ் பண்ண பொண்ணை ஒரு மொக்கையான மாப்ள கல்யாணம் பண்ணும்போது வர்ற சந்தோஷம் இருக்கு பாருங்க... அவளை நாம கல்யாணம் பண்ணிருந்தா கூட அந்த சந்தோஷம் கிடைக்காது!

கணவன்: பேப்பர்ல படிச்சியா? மன
நலப் பிரச்னைகளுக்காக 15 சதவிகித பெண்கள் மருந்து எடுத்துக்கறாங்களாம்!
மனைவி: அதுக்கு என்ன இப்போ?
கணவன்: இது எவ்வளவு டேஞ்சரான நியூஸ் தெரியுமா?
மனைவி: ஏன்?
கணவன்: மீதி 85 சதவிகித பெண்கள் மருந்தே எடுத்துக்காம திரியறாங்களே!

@RoShini_MahndiR 
கடுப்பில் வாய் தவறி சொல்லி விடும் வார்த்தைகளை காலமெல்லாம் நினைவில் வைப்பதற்கென்றே, பெண்களின் மூளையில் பிரத்யேகமாக ஒரு பகுதி செயல்படுகிறது!

கடவுள் ஏன் மக்களுக்கு பிரச்னைகள் கொடுக்கிறார்னா, அந்தப் பிரச்னைகளைத் தீர்க்கிறதுக்கு காணிக்கையாக நிறைய பணம் வருமானமா அவருக்கு வர்றதால!
- வசந்த மலர்

@nithya_shre 
பாஜக ஆட்சியில் கறுப்புப் பணம் பதுக்குவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது - தமிழிசை
# ஆமா, பதுக்கறதெல்லாம் இப்போ இல்லை! பப்ளிக்கா கன்டெய்னரில் சுத்தித் திரியுது...