ஸ்பீக்கரு...



அவர் போலி ஜோசியர்னு எதை வச்சு சொல்றே..?’’
‘‘என் ஜாதகத்தைப் பார்த்துட்டு எனக்கு ஆபத்தான ‘லெமூரியா’ கண்டம் இருக்குன்னு சொல்றாரு...’’
- யுவகிருஷ்ணா, தூத்துக்குடி



‘‘ஹன்சிகா மேல தலைவருக்கு என்ன கோபம்..?’’
‘‘இன்னும் அவர் கனவுல அவங்க வரலையாம்..!’’
- அம்பை தேவா, சென்னை-116.

என்னதான் வாழை ‘தார்’ போடும்னாலும், அதுக்கிட்ட ‘ஆதார்’ எல்லாம் கேட்க முடியாது!
- ஆதார் எடுக்காமல் ஆதாரமின்றி வாழ்வோர் சங்கம்
- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.

ஒரு வருஷமா நீங்க வாடகை கொடுக்கலை... ஞாபகம் இருக்கா?’’
‘‘எனக்கு உங்களையே ஞாபகம் இல்லை. நீங்க யாரு..?’’
‘‘அடப்பாவி! நான்தான்யா உங்க ஹவுஸ் ஓனர்!’’
- வி.சாரதி டேச்சு, சென்னை-5.

‘‘தலைவர் இன்னைக்கு பேசற கூட்டத்துல என்ன ஸ்பெஷல்?’’
‘‘மேடையில எதிர்க்கட்சிக்காரங்க வீசற முட்டைய எல்லாம் சுடச்சுட ஆம்லெட்டா போட்டுத் தர்றாங்களாம்..!’’
- பி.ஜி.பி.இசக்கி, அம்பாசமுத்திரம்.

‘‘உனக்கு ஏன் லைசென்ஸ் தரமாட்டேன்னு சொன்னாங்க..?’’ 
‘‘எட்டு போட்டுக்கிட்டே செல்ஃபி எடுக்க ட்ரை பண்ணேன்!’’ 
- ரியாஸ், சேலம்.

‘‘இந்த இரவு நேரத்தில் மேடையில் நான் மட்டும் தனியாக இருக்க பயமாய் இருக்கிறது... ஆதலால் நான்கைந்து பேராவது எங்கிருந்தாலும் உடனே மேடைக்கு முன் வாருங்கள், ப்ளீஸ்...’’
- கே.லக்ஷ்மணன், திருநெல்வேலி.