தத்துவம் மச்சி தத்துவம்



என்னதான் ஒருத்தர் காதல் மயக்கத்துல இருந்தாலும், அவருக்கு ஆபரேஷன்னா மயக்க மருந்து தராம பண்ண முடியாது!
- காதல் ஜுரத்தில் பிதற்றுவோர் சங்கம்
- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.



எதுக்கு டாக்டர் ஜுரத்துக்குப் போய் ஹார்ட்டை செக் பண்றீங்க..?’’
‘‘நான் சொல்ற ஃபீஸை உங்களால தாங்க முடியுமான்னு செக் பண்ண வேண்டாமா..?’’
- வி.சாரதி டேச்சு, சென்னை-5.

தலைவரோட பேச்சுக்கு எவனும் கை தட்ட மாட்டேங்கறானே... ஏன்?’’
‘‘அவருக்கு சவுண்ட் அலர்ஜின்னு எவனோ வதந்தியைக் கிளப்பி விட்டிருக்கான்!’’
- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.

கிட்னி ஸ்டோன் ட்ரீட்மென்ட்ல இந்த ஹாஸ்பிடல் ரொம்ப பிரபலம்...’’ 
‘‘அப்படியா..?’’
‘‘ஆமா! ஆபரேஷன்ல எடுத்த ஸ்டோனை வெச்சு ஒரு பிளாக்கே கட்டியிருக்காங்க!’’
- ரியாஸ், சேலம். 

நான் நாட்டுக்காக பெட்ரோலை மிச்சப்படுத்துறேன்...’’
‘‘எப்படி..?’’
‘‘தினமும் ஆபீஸுக்கு யார் வண்டிலயாவது லிஃப்ட் கேட்டுட்டு போயிடுவேன்!’’
- பி.பாலாஜி கணேஷ், கோவிலாம்பூண்டி.

‘‘ஃபேஸ்புக் ஸ்டேட்டஸுக்கு ‘லைக்’கும் கொடுக்க மாட்டேங்கறீங்க... பேசுவதற்கு ஸ்டேஜில் ‘மைக்’கும் கொடுக்க மாட்டேங்கறீங்க... என்னதான் செய்வார் எங்கள் தலைவர்?’’
- கே.லக்ஷ்மணன், திருநெல்வேலி.

பேஷன்ட்டை ஏற்ற ஆம்புலன்சில் இடமில்ல...’’
‘‘ஏன்?’’
‘‘கூட வர்றவங்க எல்லாரும் ஏறி உட்கார்ந்துட்டாங்க...’’
- ஏ.நாகராஜன், சென்னை-75.