வீரத்தின் விளைநிலம்உள்ள(த்)தைச் சொல்கிறோம்

மருந்துகளாலும்  தனிமைப்படுத்தலாலும் மட்டுமே வைரஸை ஒழிக்க முடியும் எனும் மருத்துவம் தாண்டி, பொறுப்பாசிரியரின் தலையங்க கட்டுரைப்படி - “வாராஹி” வழிபாடு - நிச்சயமான   நிரந்தர தீர்வாகும்.
- கே. அம்புஜவல்லி,புத்தூர், தென்னூர்.

  இரத்தின. கேசவன் எழுதிய பொன்னான வாழ்வு தரும் பொன்னவிளைந்த களத்தூரில் உள்ள குடுமி ஈஸ்வரா் ஆலய  வரலாறு அருமையாக இருந்தது. ஊரின் பெயர்க் காரணம் கூறிய விதம் அழகாகயிருந்தது.
- ஏ.தேவி மணிவண்ணன், பத்மாவதி சிதம்பரம், மடிப்பாக்கம், சென்னை.

 வாராஹி மாலை மிகவும் பயன் உள்ளதாக இருந்தது. அதைவிட அட்டைப்படம் வாராஹி தரிசனம் ஆன்மிகம் மணம் பரப்பியது. இந்த இதழில் பக்கத்துக்குப் பக்கம் வாராஹி குறித்த தகவல்கள் ஏராளம். சூப்பர்!
- ஆர்.ராஜலிங்கம் சுண்டக்கம்பாளையம், குன்னத்தூர்.

சமயம் வளர்த்த நாயன்மார்கள் தொடர் நெஞ்சத்தில் நிறைவு தருகிறது. வேலை பணப் புழக்கம்  இல்லாமை இருந்தபோதும் சிவன் வழிகாட்டுவார் என்ற நம்பிக்கையை இந்த தொடர் தருகிறது.
- எம்.பி.பொன்ராஜ், தர்மபுரி.

64 யோகினிகளின் அபூர்வ தரிசனம் கட்டுரையில் ஓடிஸா மாநிலத்தில் உள்ள ஹிராபூர் எனும் ஊரில் அமைந்து இருக்கும் சதுஷ்சஷ்டி யோகினி கோயில் பற்றி பரணிகுமார் அருமையாக கூறியிருந்தார் கோயிலுக்குகே சென்று தரிசனம் செய்த பாக்கியத்தைப் பெற்றோம்.
- அய்யாக்குட்டி முத்துராஜ், நாலாட்டன்புதூர் கோவில்பட்டி.

தெளிவு பெறுஓம் பகுதியில் ஜோதிடர் திருக்கோவிலூர் கே.பி.ஹரிபிரசாத் சர்மா அளித்த நவகிரகங்கள் குறித்த விளக்கம் அருமை,
- R.ராமர்,பாப்பாக்குடி,நெல்லை.

வாராகி அம்மன் வீரத்தின் விளைநிலம் என்ற தலைப்பில் முனைவர் ராஜேஸ்வரி எழுதிய கட்டுரை மிக அழகாக இருந்தது. வாராகியை போர்த் தெய்வமாக காட்டியிருந்ததும் அதற்கான விளக்கமும் நன்றாக இருந்தது.
- S.காளிராஜ்,கணேசபுரம் நாகர்கோவில்.

அனந்தனுக்கு ஆயிரம் நாமங்கள் தொடர் தெரியாத புராணத் தகவல்களை திரட்டித்தருகிறது. ஒவ்வொரு பெயருக்கும் அதற்குண்டான காரணத் தகவல்களோடு சொல்லியிருப்பது நன்றாக இருக்கிறது. பகவானுக்கு எல்லா நாமங்களும் பொருத்தமாகவே இருக்கிறது.
- கிருத்திகா ஜெயராமன்,திருப்பூர்.