உள்ள(த்)தைச் சொல்கிறோம்கண்ணன் கலை கூடம்

* எப்படித்தான் இப்படிப்பட்ட தெய்வீகமான அட்டைப் படங்களை தேர்ந்து எடுக்கிறீர்களோ?  ‘ஹளபேடு’ கோவர்த்தனன் விழிகளை விட்டு நகரவில்லை. அற்புதம். - சுகந்தி நாராயண், வியாசர்பாடி.

* ஊத்துக்காடு, வடசேரி  என அழைத்துப்போய் கண்களின் வேதாந்த லீலைகள் பன்னிரெண்டையும் வரிசைப்படுத்திக் காட்டியதும் மறக்க முடியாதவை. பதினெட்டு தரிசன(ம்)ங்கள் வெவ்வேறு இடமே ஆனாலும் அனைத்தும் பக்திப் பரவசப்படுத்துபவை. ‘குட்டி’ கிருஷ்ணன் கோயில்கள் ஒவ்வொன்றும் சக்தி வாய்ந்தவை எனப்புரிந்திட முடிந்தது. - சுகந்தி நாராயண், வியாசர்பாடி.

* சம்சாரியா... சந்நியாசியா... யோகியா.... காதலனா... அரசனா... என்று பல பரிமாணங்களில் மின்னிய போதிலும் முழு ஞானியாகவே விளங்கி வரும் கிருஷ்ண ஜெயந்தி குறித்த பக்குவ வார்த்தைகள் நெஞ்சக் கல்வெட்டுகளாக மிக நேர்த்தியாக  அருளிய பொறுப்பாசிரியரின் தலையங்கம் பக்தர்களின் தலையாய அங்கம். - ஆர்.ஜி.பாலன்,திசையன்விளை, நெல்லை-627657.

‘ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி’யை முன்னிட்டு வெளியான கட்டுரைகள் சிறப்பாகவும், நேரில் சென்று தரிசிக்க அவாவினையும், ஏற்படுத்தியது. ‘இறைச்சுவை இனிக்கும்’ இலக்கியத்தொடர் பரவசத்தை ஏற்படுத்துகிறது. ஆன்மிக உலகின் இமாலயம் ‘ஆன்மிகம் பலன்’ என்றால் மிகை ஆகாது. - இரா.கல்யாணசுந்தரம், கொளப்பாக்கம்.

வாசுதேவன் நிகழ்த்திய ‘வேதாந்த லீலைகள்’ எனும் கவித்துவமான தலைப்பில் கண்ணன் நிகழ்த்திய 12 வித லீலைகளைத் தொகுத்து உ.வே. வெங்கடேஷ் வழங்கிய கட்டுரை. வருவாய் கண்ணா... என்று கிருஷ்ணரை வரவேற்ற கிருஷ்ணாவின் படைப்பு மழலைக்கண்ணனின் மகத்துவம் கூறும் ‘மழலை வேதம்’ கவிதை, குழந்தை வரம் தருகின்ற குட்டிக்கிருஷ்ணனின் கோயில்களின் சிறப்புகளை விவரித்த தொகுப்பு இவையெல்லாம் கலந்து தாங்கள் படைத்த ‘கோகுலாஷ்டமி’ விருந்தை அடுத்த கிருஷ்ண ஜெயந்தி வரை மறக்க முடியாது. பாராட்டுக்கள்! - அயன்புரம் த.சத்திய நாராயணன்,  கோபாலபுரம் கிழக்கு, பட்டாபிராம், சென்னை-72.

* கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு வெளியாகியிருந்த பகவான் கிருஷ்ணனைப்பற்றிய கட்டுரைகள் யாவும் அருமை. குறிப்பாக உயர்வான வாழ்வு அளிப்பான் உலகளந்தான், காலமெல்லாம் காப்பான் காளிங்க நர்த்தனன்,  மணவரம் தருவான் மருதூர் நவநீதன் ஆகிய கட்டுரைகள் ஆன்மிகம் பலன் கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷலிற்கு சிறப்புச் சேர்த்திருந்தன. - இரா.வளையாபதி,  51, தோட்டக்குறிச்சி கரூர் மாவட்டம்.

* கிருஷ்ணர் பற்றி இதழ் பொறுப்பாசிரியர் கிருஷ்ணாவின் தலையங்கம் மற்றும் கர்நாடகம் உள்ளிட்ட பகுதிகளின் கிருஷ்ணர் தொடர்பான கட்டுரைகள் அனைத்துமே அற்புதம். - ப. மூர்த்தி, பெங்களூரு - 97.

* எங்கும் எதிலும் வியாபித்து எல்லாமுமாக ஆகி எழுந்தருளும் கண்ணனை அடைய கடும் முயற்சிகள் வேண்டாம். அவனை எளிய முறையில் மனதால் நினைத்தாலே போதும். அவனது அருள் கிடைக்கும் என்று கிருஷ்ண ஜெயந்தி சிறப்பிதழ் நலந்தானாவில் கூறியிருந்தது இதழுக்கு மேலும் சிறப்பைச் சேர்த்தது. - மு.மதிவாணன்,  அச்சல்வாடி அஞ்சல், பதிவர்தைகளின் பட்டியலில் மண்டோதரி இடம் பெற்று இருப்பது, எல்லா கற்புடைய பெண்களும் மண்டோதரியின் பெயரை உச்சரிப்பதைக்  கண்கூடாகக் காண முடிகிறது. - இராம.கண்ணன், சாந்தி நகர், திருநெல்வேலி - 627002.

* முழு இதழுமே பூரண யோகியின் பரிபூரண சமர்த்துக்களை சுமந்து தந்திருப்பதால் மனச் சுமைகளை இறக்கி வைத்து மகிழவும், நெகிழவும் வைத்தது கிருஷ்ண ஜெயந்தி சிறப்பிதழ்! - ஆர்.விநாயகராமன், செல்வமருதூர், திசையன்விளை.