திகட்டாத தேன் அமுது!



உள்ள(த்)தைச் சொல்கிறோம்

* அன்னத்தால் சிவனுக்கு அன்னா அபிஷேகம் நடக்கும் இனிய தருணத்தில் அன்ன(ம்) பூரணியின் வண்ணப் (அட்டைப்) படமும், அன்னம்-அன்னை-அன்னபூரணிப் பற்றிய பல அறிய திரளான தகவல்களும் இதழை பக்தி மணம் பரப்பத்தான் செய்தன. படிக்க படிக்கத் திகட்டாத தேன் அமுது.
- சுகந்தி நாராயணன், வியாசர் நகர்.

* ஈசனுக்கு அன்னாபிஷேக வைபவம் அனைத்து சிவாலயங்களில் நிகழும் நன்னாள். சமயத்தில் அன்னபுரணி பக்தி ஸ்பெஷலைப் படைத்து, அன்னம் அருளும் அன்னை அன்னபூரணியின் மகத்துவங்களையும், அன்னதானத்தின் அருமையினையும் பசி, பஞ்சம் போக்கும் காசி அன்னபூரணியின் சிறப்புக்களையும் ருசிக்க வைத்து எங்களின் ஆன்மிகப் பசியைப் போக்கும் தெய்வீக விருந்து படைத்துவிட்டீர்கள். நன்றி, பாராட்டுக்கள்.
- அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை-72.


* பூசை.க.அருண வசந்தன் எழுதிய ‘பஞ்சம் பசி போக்குவாய் அன்னபூரணி கட்டுரை வாசித்தேன். மனம் நிறைவு பெற்றது. நன்மைகள் நல்கிடும் (ராம) நவகிரகங்கள் படித்து, நெகிழ்ந்து போனேன்.
- சு.இலக்குமணசுவாமி, திருநகர், மதுரை-6.

பொறுப்பாசிரியர் தன் தலையங்கத்தில் (‘போதி மரம்’) வேருக்கடியில் நீரில்லாத போதும் பூமிக்கடியில் கிடைக்கக்கூடிய ஈரப்பசையை ஈர்த்துக் கொள்வதுபோல், சிறுவயதிலிருந்தே மனசுக்குள் நீராக ஊற வேண்டிய ஆன்மிகப் பண்பை பசுமையாக வைத்திருக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டிய விதம் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
- எஸ்.எஸ்.வாசன், தென்எலப்பாக்கம், வந்தவாசி.

* முகப்பினை அலங்கரித்திருந்த அன்னபூரணி தாயாரின் அழகிய தத்ரூபமான வண்ணப்படம், பசி, பஞ்சம் நீக்குவாள் காசி அன்னபூரணி என்ற அற்புதமான கட்டுரை ஆகியன அந்த உலகிற்கே உணவளித்து வரும் அன்னபூரணித் தாயாரின் ஆன்மிக வலிமையை பொருள்பட உணர்த்தியிருந்தன!
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

* அன்னாபிஷேகம் நடைபெறும் இத்தருணத்தில் ‘‘பஞ்சம் பசி போக்கும் அன்னபூரணி’’ என்ற கட்டுரையில் அன்னபூரணி அம்மை வரலாறு, அன்னபூரணியின் திருவுருவங்கள் அன்னப்பனும் அன்னபூரணியும் என்ற தலைப் பில் அன்னபூரணி பற்றி விளக்கமாகக் கூறி அன்னபூரணி அம்பிகையின் படத்தையும் வெளியிட்டதுடன் அன்னத்தை சார்த்திய அலங்காரத்துடன் சிவலிங்கம் படத்தையும் வெளியிட்டது தரிசித்து பயனடையச் செய்வதாக இருந்தது. மேலும் திருச்சோற்றுத்துறை அன்னபூரணி காஞ்சிபுரம் அன்னபூரணி, திருவிழிமிழலை அன்னபூரணி மற்றும்  பிட்சாடனர் படத்தை வெளியிட்டதும் சிறப்பு.
- கே.சிவகுமார், சீர்காழி,நாகை மாவட்டம்.

* ‘ஆன்மிகம் பலனில்’ பைரவாஷ்டமியை முன்னிட்டு அவரைப்பற்றி அரிய தகவல்களையும் வழிபட்டால் ஏற்படும் நன்மைகளையும் எங்களுக்கு வழங்கியிருப்பது பெருமிதமாக உள்ளது. பைரவரின் சக்தி அறிந்து பிரமித்தேன்.
- வா.மீனாவாசன், சென்னாவரம்.பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோதிடர்

* பன்னிரண்டு ராசிக்காரர்களுக்கும் வழங்கிய சனிப்பெயர்ச்சிப் பலன்கள், அவை சொல்லப்பட்ட விதம் அருமையாக இருந்தது. சனிபகவான் மீதான பயத்தை விலக்கியது!
- ராஜமார்த்தாண்டன், சிலிகுரிபேட்டா.