வேண்டிய வரமெலாம் அருளும் வரலடசுமி விரத ஸ்லோகம்
வரலட்சுமி விரத மகிமையை விளக்கும் சில புராணக் கதைகள் உண்டு. அன்னை பார்வதியின் சாபத்துக்கு ஆளான தேவர் உலகின் சித்ரநேமி என்ற கணதேவதை, அப்சரஸ் பெண்கள் கடைப்பிடித்த வரலட்சுமி விரதத்தைக் கண்டு அனுஷ்டித்து சாப விமோசனம் பெற்றார். பூவுலகில் சௌராஷ்டிர நாட்டின் ராணி சுசந்திரா, செல்வ வளத்தின் மமதையால், மகாலட்சுமியை அவமதித்தாள். அதனால் அனைத்து செல்வங்களையும் இழந்து வருந்தினாள். சுசந்திராவின் மகள் சாருமதி, தெய்வ அனுகூலத்தால் வரலட்சுமி விரதம் பற்றி அறிந்து, அதைக் கடைப்பிடித்தாள். அதனால் மகிழ்ந்த மகாலட்சுமித் தாய், அவளுக்கு சகல நலன்களையும் அருளினாள்.
சுசந்திராவும் தன் மகளைப் பார்த்து வரலட்சுமி விரதம் கடைப்பிடித்து, இழந்த செல்வத்தை மீண்டும் பெற்று வளமோடு வாழ்ந்தாள். இப்படி சகல வளங்களையும் தரும் இந்த வரலட்சுமி விரத பூஜையை, ஆவணி மாத பௌர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டும். முக்கியமாக, பெண்கள் மேற்கொள்ள வேண்டும். சுமங்கலிகள், தாலி பாக்கியம், சுபிட்சம், ஸௌபாக்கியம் பெற இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.
கேட்கும் வரங்களைத் தரும் லட்சுமி தேவியை பூஜித்தல் இதன் சிறப்பு. திருமணமான பெண்கள், தங்கள் திருமணத்தை அடுத்துவரும் வரலட்சுமி பூஜையிலிருந்து இதை ஒவ்வொரு வருடமும் செய்ய வேண்டும். வரலட்சுமி விரதத்தின் போது வீட்டுக்கு விலக்காக இருந்தால் அடுத்து வரும் வெள்ளிக்கிழமை இந்த பூஜையைச் செய்யலாம். இதைச் செய்யும்போது, சிறு பெண்களும் உடனிருந்து சரடைக் கட்டிக் கொள்ளலாம். மறுநாள் அம்மனுக்கு ஆரத்தி எடுத்த பின்னர் கலசத்தை அரிசி வைத்திருக்கும் பானையில் வைக்க வேண்டும்.
எல்லோராலும் மிக விரிவாகச் செய்ய இயலாவிட்டாலும், ஈடுபாட்டோடு தெரிந்த பாடல்களைப் பாடி, மகாலட்சுமி அஷ்டோத்திரம் சொல்லி, பூக்களால் அர்ச்சனை செய்து, நிவேதனம் செய்து, நோன்பு சரடை கையில் கட்டி நிவேதனத்தை எல்லோருக்கும் கொடுத்து, வயதான சுமங்கலிப் பெண்களை வணங்கி தானங்கள் செய்து இந்த விரத பூஜையை நிறைவு செய்யலாம். மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீட்சிதர், தன் ‘வரலக்ஷ்மி நமஸ்துப்யம்’ க்ருதியில் இந்த விரதத்தைப் பற்றிப் பாடியிருக்கிறார். கீழ்க்காணும் ஸௌபாக்ய லக்ஷ்மி அஷ்டகத்தை வரலக்ஷ்மி தினத்தன்று பாராயணம் செய்து சகல நலன்களையும் வளங்களையும் பெற்றிடலாம். ஸௌபாக்ய லக்ஷ்மி அஷ்டகம்.
த்யானம்
வந்தே ஸத்குருவரலக்ஷ்மீம் ஸம்பூர்ணஸௌபாக்யலக்ஷ்மீம் க்ஷீரஸாஹரோத்பவலக்ஷ்மீ ஜயஜயகோலக்ஷ்மீம்
ஆனந்த அம்ருதலக்ஷ்மீம் அம்ருத கடாக்ஷ லக்ஷ்மீம்
ஆபதோத்தாரலக்ஷ்மீம் சாந்தி ஸௌபாக்ய லக்ஷ்மீம்
ஓம் ஆதிஸந்நான கஜ தனதான்ய விஜயவீர மஹாலக்ஷ்மியை நமோ நம:
ஸர்வாலங்காரலக்ஷ்மீம் ஸகல ஸௌபாக்ய லக்ஷ்மீம்
சாரதாரூபலக்ஷ்மீம் ஸகலஸௌ பாக்யலக்ஷ்மீம்
ஜிஹ்வாநிவாஸலக்ஷ்மீம் ஸார ேக்ஷத்ரப்ர ஸாதலக்ஷ்மீம்
மந்த்ரஸ்வரூபலக்ஷ்மீம் மானஸோல்லாஸலக்ஷ்மீம்
மானஸோல்லால லக்ஷ்மீம் சரணம் ப்ரபத்யே
விநயவிமலலக்ஷ்மீம் வேதாந்த சாரலக்ஷ்மீம்
கருணாகடாக்ஷலக்ஷ்மீம் காருண்ய பாக்யலக்ஷ்மீம்
புத்ர சந்தானலக்ஷ்மீம் புவனதன தான்யலக்ஷ்மீம்
ஸர்வஸௌ பாக்யலக்ஷ்மீம் சாந்திஸம்பன்னலக்ஷ்மீம்
சாந்திஸம்பன்ன லக்ஷ்மீம் சரணம்ப்ரபத்யே
வித்யவிசாலலக்ஷ்மீம் வேதாந்தமோக்ஷ லக்ஷ்மீம்
அக்ஷ்ரபாக்யலக்ஷ்மீம் ஆத்மாநூபூதி லக்ஷ்மீம்
தாபத்ரயநாசலக்ஷ்மீம் தன்வந்த்ரிரூப லக்ஷ்மீம்
லோஹஸ்வரூபலக்ஷ்மீம் சுத்தசௌபாக்ய லக்ஷ்மீம்
சுத்தஸௌபாக்யலக்ஷ்மீம் சரணம் ப்ரபத்யே
ஸ்தாவரஜங்கமலக்ஷ்மீம் கோதான்யா விருத்திலக்ஷ்மீம்
ஸோமஸோதரபாக்யலக்ஷ்மீம் சிந்தாமணி ரத்னலக்ஷ்மீம்
க்ஷீரஸௌபாக்யலக்ஷ்மீம் ஸேவிதமோஹ லக்ஷ்மீம்
ஜயஜவைராக்யலக்ஷ்மீம் சித்தப்ரஹாச லக்ஷ்மீம்
சித்தபிரஹாசலக்ஷ்மீம் சரணம் ப்ரபத்யே கல்பககாமதேனுலக்ஷ்மீம் கனகஸௌ பாக்யலக்ஷ்மீம்
தேவேந்தராரோஹணலக்ஷ்மீம் ஐராவத பூஜ்யலக்ஷ்மீம்
கிருஷ்ணமூர்த்திலக்ஷ்மீம் ஸேவ்யஸம் பன்னலக்ஷ்மீம்
வீர்யவிஜயலக்ஷ்மீம் விஷ்ணுமாயேதி லக்ஷ்மீம்
விஷ்ணுமாயேதிலக்ஷ்மீம் சரணம் ப்ரபத்யே
ஜ்வரபயஸோஹ ஹந்த்ரீம் ஸோஹவிநாஸ மந்த்ரீம்
துஷ்டமிருகவைர்தந்த்ரீம் துர்ஸ்வப்ன நாஸ யந்த்ரீம்
துர்காஸ்வரூபலக்ஷ்மீம் துரிதஹரமோக்ஷ லக்ஷ்மீம்
ஸாயுஜ்யஸாம்ராஜ்யலக்ஷ்மீம் ஸத்யஸ் வரூபலலக்ஷ்மீம்
ஸத்யஸ்வரூபலக்ஷ்மீம் சரணம் ப்ரபத்யே ஜயஜயகோஷலக்ஷ்மீம் சோமஸௌபாக்ய லக்ஷ்மீம்
ஸர்வஸக்தி ஸ்வரூபலக்ஷ்மீம் ஸர்வ மூர்த்திப்ரபாவ லக்ஷ்மீம்
அனுக்ரஹ ஆச்சார்யலக்ஷ்மீம் பாலகுஹ யோஹ லக்ஷ்மீம்
ஸர்வஸமய லக்ஷ்மீம் ஜயமங்களஸ்தோத்ர லக்ஷ்மீம்
ஜயமங்களஸ்தோத்ரலக்ஷ்மீம் சரணம் ப்ரபத்யே
ஞானஸ்வரூபலக்ஷ்மீம் நாதாந்தஞான லக்ஷ்மீம்
ஸ்வரமயகீதலக்ஷ்மீம் ஞானப்ரமோத லக்ஷ்மீம்
ஹ்ருத்யகமலவாஸலக்ஷ்மீம் சதுர்வேதஸார லக்ஷ்மீம்
ஸஹஸ்ரகர ஸௌபாக்யலக்ஷ்மீம் அஷ்டஸௌபாக்ய ஸ்லோகலக்ஷ்மீம் சரணம் ப்ரபத்யே.
|