பாலபிஷேகம் செய்தால் பரமபதம் உண்டு



மதுரையில் விளக்குத்தூண் அருகே நவநீதகிருஷ்ணன் கோயில் உள்ளது. இங்கு அருள்பாலிக்கும் நவநீதகிருஷ்ணன் இரண்டு கைகளிலும் வெண்ணெயுடன் சிரித்த முகத்துடன் பாலகனாக நின்றபடி காட்சி தருகிறார்.

இவர் வீதியுலா செல்வது கிடையாது. ஒவ்வொரு ரோகிணி நட்சத்திர தினத்திலும் விசேஷ பூஜை நடக்கிறது; கோகுலாஷ்டமி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. புத்திர தோஷம் உள்ளவர்கள் இவருக்கு வெண்ணெய், சர்க்கரை பொங்கல், அவல் படைத்து வழிபட்டால் பலன் கிடைக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.

(இந்த ஆலயத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீநிவாசர் மீது மூன்று மாதங்கள் சூரிய ஒளி விழுவது சிறப்பம்சமாகும்.) தினமும் காலையில் கிருஷ்ணருக்கு 27 நட்சத்திர தீபம் மற்றும்108 தீபம் ஏற்றி தூபம் காட்டுகின்றனர். இந்தக் கோயிலில் கண்டகி நதியில் கிடைத்த சாளக்கிராம கற்களைப் பராமரித்து வருகிறார்கள், இந்தக் கற்களுக்கும், சடாரிக்கும் தினமும் பாலபிஷேகம் நடக்கிறது. இந்த அபிஷேகத்தைக் காண்பவர்களுக்கு வைகுண்ட பதவி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

ஆதரவளிப்பாள் ஆலமூடு அம்மன்கன்னியாகுமரி மாவட்டத்தில் முப்பந்தல் ஆலமூடு அம்மன் மிகவும் பிரசித்தி பெற்றது. இது முப்பந்தல் இசக்கியம்மன் ஆலயத்துக்கு கிழக்கு பக்கம் அமைந்துள்ளது. ஆலமூடு அம்மன் வலது கையில் ஆலமும், இடது கையில் குழந்தையுமாய் நின்ற கோலத்தில் அருளாட்சி புரிகின்றாள். இங்கு பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி மிகவும் விசேஷமானது. ஆண்டு தோறும் இவ்வாலயத்தில் ஆடி மாதம் இரண்டாவது செவ்வாய்க்கிழமையில் கோயில் கொடை விழாவும் தை மாதம் இரண்டாவது செவ்வாய்க்கிழமை புஷ்பாபிஷேக விழாவும் நடைபெறும்.

இவ்வாலயத்தின் வளாகத்தில் ஆங்காங்கே மண் புற்றுகள் காணப்படுகின்றன. விக்ரகமாக பன்றி மாடசுவாமியும், புற்றாக நாகரம்மனும், உயர்ந்த இன்னொரு புற்றாக உஜ்ஜைனி மகாளி அம்மனும் அருள்பாலிக்கிறார்கள். மழலை வரம், மாங்கல்யம் வரம் வேண்டி வருபவர்களுக்கு அம்பாள் அருள் புரிகிறாள். இவ்வாலயத்தில் பக்தர்களிடம் காணிக்கையே வாங்குவதில்லை. காவல் தெய்வமாக அக்னி மாடனும், புல மாடனும் திகழ்கிறார்கள். ஆலயத்தில் முதல் பூஜை அம்மனுக்கும், இரண்டாவது பூஜை சுவாமிபன்றிமாடனுக்கும், பிறகு மற்ற தெய்வங்களுக்கும்.

காரிய சித்தி தரும் காடாம்புழா பகவதி

கேரள மாநிலம் பல பிரசித்தி பெற்ற ஆலயங்களின் இருப்பிடம் குருவாயூர், சபரிமலை, சோட்டாணிக்கரை போன்ற புகழ்மிக்க ஆலயங்கள்போல் காடாம்புழா பகவதியும் மிகப்பிரசித்தி பெற்ற தெய்வம்.ஆதிசங்கரரால் சுமார் 1900 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட மிகப்பழமையான திருத்தலம், கோயில் அடக்கமும், அமைதியுமான சூழலில் அமைந்திருந்தாலும் அங்கே எழுந்தருளியுள்ள பகவதியின் புகழ் பெரிது.

இந்தக் கோயிலில் எந்தத் திருவிழாவும் இல்லை. இங்கே தினமும் வரும் பக்தர்களின் கூட்டம்தான் சிறப்பானதாகும் இக்கோயிலின் முக்கியமான வழிபாடு ‘முட்டு அறுக்கல்’ அதாவது, எந்தெந்தக் காரியங்களில் நமக்கு தடை இருக்கிறதோ அந்தத் தடை நீங்கி காரியம் நடைபெற வேண்டுமென்று தேவியைப் பிரார்த்தித்து ஒரு தேங்காய் உடைக்க வேண்டும்.

படிப்பு, வேலை, தொழில், திருமணம், குழந்தை பாக்கியம், வாகனம், சொந்த வீடு, எதிர்ப்புகள், குடும்ப சச்சரவுகள், பகைவர் தொல்லை, வழக்குகள், உடல்நலம், மனக்கவலை அனைத்துப் பிரச்னைகளுக்கும் பிரச்னைகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு தேங்காய் உடைக்க வேண்டும். பெயர், நட்சத்திரம் பிரச்னை விஷயங்களைச் சொல்லி, பிரச்னை ஒவ்வொன்றிற்கும் ஒரு காணிக்கைச் சீட்டு வாங்கி, தேங்காயையும், சீட்டையையும் அர்ச்சகர்களிடம் கொடுத்தால், அர்ச்சகர்கள் அதை அம்பாளிடம் வாசித்துக்காட்டி தேங்காயை உடைத்துத் தருவார். இந்தப், பிரார்த்தனையை ‘முட்டு அறுக்கல்’ என்று சொல்கிறார்கள்.

அதாவது தடைகள் என்ற முட்டு நீங்க தேங்காய் (முட்டு) உடைத்தல் (அறுக்கல்) வழிபாடு நடைபெறுகிறது. இந்தப் பிரார்த்தனையால் பலன் ஏற்படுகிறது என்று பக்தர்கள் நம்புகின்றனர்.
காடாம்புழாவில் கால் வைத்தாலே மனநிம்மதியும், நம்பிக்கையும் வருவதைக் காண்பீர்கள். ஆடம்பரமில்லாத அதிக சக்தி வாய்ந்த அம்மனின் ஆலய தரிசனம் நிச்சயம் புத்துணர்வு தரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

கோட்டாறு கோலப்பன்