இதயம் இனித்தது!



ரீடர்ஸ் கிளாப்ஸ்!

பர்ஸ்ட் நைட்டில் பால், பழத்தோடு குவார்ட்டரும், சைட்டிஷ்ஷும் வைத்ததுமாதிரி முழுத் திருப்தியை வழங்குகிறது சரோஜாதேவி பதில்கள் பகுதி.
- கவிஞர் கா.திருமாவளவன், திருவெண்ணெய்நல்லூர்.

நடுப்பக்க அமிஸ்தாவைப் பார்த்தால் ஜவுளித்துறை வீழ்ச்சி பட்டவர்த்தனமாகவே புலப்படுகிறது.
- கவிஞர் நீலமலை ஜே.பி., உதகை.

எனக்கான இடம் இருந்து கொண்டேதான் இருக்கிறது என்கிற ஜி.எம்.சுந்தரின் தன்னம்பிக்கை, அவருக்கு மேலும் மேலும் வாய்ப்புகளை பெற்றுத் தரும்.
- கே.நடராஜன், திருவண்ணாமலை.

தயவுசெய்து புளோ-அப்களை அடுத்தடுத்து இரண்டு பக்கங்களில் போடாதீர்கள். பிரிக்கும்போதே நெஞ்செல்லாம் படபடக்கிறது.
- எம்.சேவுகப்பெருமாள், பெருமகளூர்.

முன்னட்டை அலினா குல்பி ஐஸ் என்றால், பின்னட்டை ராக்சி கன்னா பாசந்தி. இதயம் இனித்தது பாஸ்!
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

நடுப்பக்க நயாகரா வீழ்ச்சிக்கு முன்பாக ஜவுளித்துறை வீழ்ச்சியெல்லாம் எடுபடாது சார்.
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.

கராத்தே மணி குறித்த நினைவலைகள் அருமை சார். மின்னுவதெல்லாம் பொன்தான் என்பதில் ஐயமேது
மில்லை.
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.