சந்தானத்துக்கு ஹீரோயின் பஞ்சம்!* ‘பொன்மகள் வந்தாள்’ படத்தில் வக்கீலாக நடிக்கிறார் ஜோதிகா. இந்தப் படத்தில் ஜோதிகாவின் அப்பாவாக பாக்யராஜ் நடிக்கிறார். இந்தப் படத்தை ஜே.ஜே.பிரட்ரிக் இயக்குகிறார்.

* சந்தானம் படங்கள் வியாபார ரீதியாக வெற்றியடைந்தாலும் சந்தானத்துடன் ஜோடியாக நடிக்க முன்னணி நடிகைகள் தயங்குகிறார்களாம். சமீபத்தில் தொடங்கப்பட்ட சந்தானம் படங்களுக்கு நாயகிகள் இல்லாமலேயே படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

* தமிழ் சினிமாவில் இது மேனேஜர்களின் சீசன். அந்த வரிசையில் இயக்குநர் விக்னேஷ் சிவனின் மேனேஜர் மயில்வாகனன், நயன்தாரா நடிக்கும் ‘நெற்றிக்கண்’ படத்தின் இணைத் தயாரிப்பாளராகியிருக்கிறார்.

அதேபோல் ‘பிகில்’ படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் படத்தில் நிர்வாகத் தயாரிப்பாளராகப் பணியாற்றுகிறார் ஜெகதீஷ். இவர், கீர்த்தி சுரேஷ் மேனேஜர். இந்தப் படத்தை ‘மாநகரம்’ லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.

- ரா