சர்க்கரை.. அடிக்கரும்பு.. எறும்பு!ரீடர்ஸ் கிளாப்ஸ்!

புது கெட்டப்பில் பிரசாந்த் கலக்க இருக்கும் படம் பற்றிய தியாகராஜன் அவர்களின் பேட்டி, பிரசாந்தின் செகண்ட் இன்னிங்ஸுக்கு கட்டியம் கூறுகிறது.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

படங்களுக்கு கமெண்ட் பண்ணுறவா அபிஷ்டு மாதிரி கழுத்தையே மென்ஷன் பண்ணுறாளே. கொஞ்சம் கீழிறங்கி அடிக்கலாமில்லே?
- சுவாமி சுப்ரமணியா, குனியமுத்தூர்.

பைம்பொழில் மீரான் எழுத்தில் மின்னுவதெல்லாம் புடம் போட்ட பத்தரைமாத்து தங்கமாகவே இருக்கிறது. கோமல் சாமிநாதன் குறித்த கட்டுரை இதுவரை மின்னியதைவிட சிறப்பு மின்னல்.
- கவிஞர் கா.திருமாவளவன், திருவெண்ணெய்நல்லூர்.

‘காசுக்குதான் நடிக்கிறேன், ஆனா கவர்ச்சியா நடிக்கமாட்டேன்’ என்கிற ராதிகா ப்ரீத்தியின் நேர்மை ரொம்பவே பிடிச்சிருக்கு.
- கே.நடராஜன், திருவண்ணாமலை.

நடுப்பக்க மங்கைக்கு நீங்க அடிச்ச கமெண்டின் நிறம் பச்சை. இதனால் எங்களுக்கெல்லாம் ஏற்பட்ட உணர்வு இச்சை.
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

சரோஜாதேவி பதில்கள் சர்க்கரை என்றால், அதற்கு பொருத்தமாக நீங்கள் பிரசுரிக்கும் படங்கள் அடிக்கரும்பு. வாசர்களான நாங்களோ எறும்புகள்.
- அன்சாரி, உடுமலைப்பேட்டை.

ஏனுங்கோ வாத்தியாரே. கவர்ச்சிப் படங்களுக்கு கமெண்டு எழுதுவீங்களா அல்லது கமெண்டு எழுதிட்டு அதுக்குப் பொருத்தமா படங்களை தேடுவீங்களா? ஜாடிக்கேத்த மூடி மாதிரி கமெண்டும், கவர்ச்சியும் ஒண்ணுக்கொண்ணு அவ்வளவு பொருத்தமா இருக்கே?
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.