வளர்ந்தா வளர்ப்பாங்க!சரோஜாதேவி பதில்கள்

* பெண்களால் மறைக்க முடியாதது எது?
- பி.ராஜேந்திரன், திருவண்ணாமலை.

மனசு.
* அந்தக் காலத்தில் கண்ணழகு, முன்னழகு, பின்னழகு என்று தனித்து குறிப்பிட நடிகையர் இருந்தார்கள். இப்போது அப்படி யாரையும் குறிப்பிடுவதில்லையே?
- சுவாமி சுப்ரமணியா, பெங்களூர்.

அப்போது கண், முன், பின்னென்று தனித்தனியாகக் காட்டினார்கள். இப்போதுதான் தாராளமயமாக்கல் அமல்படுத்தப்பட்டு மொத்தமாகக்
காட்டு காட்டுவென காட்டுகிறார்களே?
* காதல் தோல்வி என்றால் ஆண்கள் தாடி வளர்க்கிறார்கள். பெண்கள்?
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

தாடி வளர்ந்தால் வளர்க்கப் போகிறார்கள்.
* இரவு எப்போது இனிக்கும், எப்போது கசக்கும்?
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

இளமையில் இனிக்கும். முதுமையில் கசக்கும்.
* மழையில் நனைய பிடிக்குமா?
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
நனைந்து காட்டட்டுமா சரவணன்?