நடுப்பக்க விளைச்சல்!



ரீடர்ஸ் கிளாப்ஸ்!

ஆடி மாசம் புதுமனைவி யைப் பிரிஞ்சு, ஆசைக்கு அணைபோட்டு வீராப்பாய் வாழும் மாப்பிள்ளைகளுக்கு வில்லங்கம் வைக்கிற மாதிரி அட்டையிலே மாராப்பூ போடாத மத்தாப்பூவை போட்டிருக்கீங்களே, நியாயமா?
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.

‘கடாரம் கொண்டான்’, ‘ஆடை’, ‘உணர்வு’ ஆகிய படங்களின் விமர்சனங்கள் அருமை. நிறைகுறைகளை சீர்தூக்கி எடைபோட்டு திறம்பட வைக்கப்படும் விமர்சனங்கள் பாராட்டத்தக்கன.
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

கலக்கல் ஸ்டாராக திரையுலகில் கலக்குவேன் என்று தன்னம்பிக்கையுடன் கூறும் பரமேஸ்வரின் பேட்டி படுதூள் சார்.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

எல்லோருக்கும் நல்லவராக இருக்க முடியாது. என்னிடம் நல்லவர்களாக நடந்துகொள்பவர்களுக்கு நான் நல்ல
வளாக இருக்கிறேன் என்கிற துஷாராவின் பதில் நச்.
- கே.நடராஜன், திருவண்ணாமலை.

‘மின்னுவதெல்லாம் பொன்தான்’ பகுதியில் ரஷியாவையே மிரளவைத்த வங்கத்து இளைஞன் நிமாய்கோஷின் கதை பிரமாதம்.
- கவிஞர் கா.திருமாவளவன், திருவெண்ணெய்நல்லூர்.

நடுப்பக்க விளைச்சல் பிரமாதம் சார்.
- வெங்கி, பம்மல்.

காதல் வர்றப்போ வரட்டும் என்று வழிமேல் விழிவைத்து காத்திருக்கும் ஜனனியின் மீது மன்மதன் தன் அம்பை சீக்கிரம் எய்யட்டும்.
- கார்த்திக், திருவள்ளூர்.