தல - தளபதி டைரக்டர்!தமிழில் அஜீத், விஜய் இருவரையும் இயக்கிய இயக்குநர்கள் மிகவும் குறைவு. கே.எஸ்.ரவிக்குமார், ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்ட வெகு சிலரே இரண்டு ஹீரோக்களையும் திருப்திப்படுத்திய இயக்குநர்கள். அவ்வகையில் லேட்டஸ்ட்டாக இந்தப் பட்டியலில் வினோத் இணைவார் என்கிறது கோலிவுட்.
கார்த்தி நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ மூலம் அனைவரையும் கவர்ந்த ‘சதுரங்க வேட்டை’ வினோத்தின் இயக்கத்தில் அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ வெளியாகி நல்ல வரவேற்புகளை ரசிகர்களிடம் பெற்றிருக்கிறது.

இதைத் தொடர்ந்து தன்னுடைய அடுத்த படத்தையும் இயக்கும் வாய்ப்பை வினோத்துக்கே கொடுத்திருக்கிறார் அஜீத். இடையில் விஜய்யும் வினோத்தை அழைத்து கதை கேட்டிருக்கிறாராம். விஜய்க்கு கதை மிகவும் பிடித்திருக்கும் நிலையில் அஜீத்தின் படத்தை முடித்தவுடனேயே, விஜய் படத்தை வினோத் துவங்குவார் என்று தகவல்.

- யுகி