இட்லி நல்லா வெந்திருக்கு!ரீடர்ஸ் கிளாப்ஸ்!

‘டைட்டில்ஸ் டாக்’ பகுதியில் நாமறியாத மெட்ராஸை படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் மைம் கோபி.
- ஜி.திருமாவளவன், திருவெண்ணெய்நல்லூர்.

33-ஆம் பக்க முமைத்கான் நிஜமாகவே ‘மலை’க்க வைத்துவிட்டார்.
- கே.செல்வராஜ், வழுதரெட்டிப் பாளையம்.

அஜித் படத்தில் டாப்ஸி நடிக்க மறுத்தாரா என்பதே தமிழர்களுக்கு விடைதெரியா கேள்வியாக இருந்தது. அவரிடமே கேட்டு விளக்கம் பெற்றுத் தந்ததற்கு நன்றி.
- அ.காஜாமைதீன், நெய்க்காரப்பட்டி.

நடுப்பக்கத்துக்கு ராஷி கன்னா பிரும்மாண்டம். கமெண்டு சொல்லுவதைப்போல பரந்த இடம்தான். பட்டா கிடைக்குமாவென்றுதான் தெரியவில்லை.
- எம்.சேவுகப்பெருமாள், பெருமகளூர்.

‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’ படத்துக்கு ‘வண்ணத்திரை’ எழுதிய பாசிட்டிவ்வான விமர்சனம் சூப்பர். அதற்குள் எங்கள் ஊர் தியேட்டர்களில் படத்தை எடுத்துவிட்டார்கள் என்பதுதான் சோகம்.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

ஆக்‌ஷன் மாஸ் காட்டுகிறார் என்று விஜய்சேதுபதியின் ‘சிந்துபாத்’ குறித்து ‘வண்ணத்திரை’ கொடுத்த க்ளூ, அவரது ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கிறது.
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

ஏனுங்க, கவர்ச்சிப் படங்களுக்கு கமெண்டு எழுதறவரு ஓட்டலில் வேலை பார்க்கிறவரோ? 55-ஆம் பக்கத்து இட்லி நல்லா வெந்திருக்குன்னு பக்காவா பக்குவம் சொல்லுறாரே?
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.