கன்னிப் பஞ்சம்!சரோஜாதேவி பதில்கள்


கன்னிப்  பஞ்சம்

* பருவமழை போக்கு காட்டுகிறதே?
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
போக்கு காட்டுவதுதான் பருவத்தின் தன்மை. மடக்கிப் போடுவது உம்ம சாமர்த்தியம்.

* முதலிரவில் ஆப்பிள் வைக்கிறார்கள். மாம்பழம் வைப்பதில்லையே?
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.
வைச்சுட்டா மட்டும்?

* தூக்கணாங்குருவிக் கூட்டை பார்த்தால் என்ன தோன்றும்?
- கே.செல்வராஜ், வழுதரெட்டிப்பாளையம்.
ஆணிடம் கேட்க வேண்டிய கேள்வியைப் பெண்களிடம் கேட்கப்படாது.

* தண்ணிப்பஞ்சம் எப்போ தீரும்?
- என்.இன்பா, திருவண்ணாமலை.
அடுத்து கன்னிப்பஞ்சமும் ஏற்படப்போவுதாம் ஓய். எப்படி சமாளிக்கப் போறீரு?

* பெண்ணைக் கண்டால் பேய் இறங்குமா?
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.
பேயே பெண் மீதுதான் ஏறுகிறது.