திரட்சியான சொல்லாட்சி!ரீடர்ஸ் கிளாப்ஸ்!

நடுப்பக்கத்தில் மத்தியப் பிரதேசத்தை காட்டு காட்டென்று காட்டி காவ்யா சிங் கொடுத்திருக்கிற போஸும், அதற்கு ‘மாறுது காட்சி, இனிமே நம்ம ஆட்சி’ என்கிற கமெண்டும் எலெக்‌ஷன் ரிசல்ட் வந்ததற்கு மறுதினம் வெளிவந்த இதழுக்கு ரொம்பவே பொருத்தமாக இருந்தது.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

‘மின்னுவதெல்லாம் பொன்தான்’ பகுதியில் தமிழ் சினிமா மறந்துவிட்ட பிரும்மாண்ட தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோனை மீண்டும் நினைவுறுத்தியது அருமை.
- கவிஞர் கா.திருமாவளவன், திருவெண்ணெய்நல்லூர்.

41-ஆம் பக்கத்து தஷு கெளசிக் ஸ்டில் சூப்பரு. புள்ளி தெரிஞ்சாலே, அதை வெச்சு மைதானம் கட்டி, கில்லி விளையாடுவதில் கில்லாடியான ‘வண்ணத்திரை’ வாசகர்களான எங்களுக்கு புல்வெளியையே காட்டிட்டீங்க. சும்மா பாய்ஞ்சி மேய்ஞ்சிட மாட்டோம்?
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.

எலிமையே வெல்லும் என்கிற தலைப்பில் ‘மான்ஸ்டர்’ படத்துக்கு எழுதப்பட்ட விமர்சனம் சூப்பர். படத்தின் சிறப்புகளை சுட்டிக்காட்டி, படம் பார்க்கும் ஆவலைத் தூண்டி விட்டீர்கள். விமர்சனம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்.
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

‘வண்ணத்திரை’யில் வெளியிடப்படும் புளோஅப் படங்களுக்கு நீங்கள் எழுதும் கமெண்டுகளை ‘திரட்சியான சொல்லாட்சி’ என்று பாராட்டலாம். அதை எழுதும் சொல்கலை வேந்தர் யாரோ?
- வெ.லட்சுமி நாராயணன், வடலூர்.

நடுப்பக்க காவ்யாசிங்கின் கலசக்காட்சி ஆட்சியையே கவிழ்த்தாலும் ஆச்சரியம் ஏதுமில்லை.
- சுவாமி சுப்பிரமணியா, குனியமுத்தூர்.

எந்த கோட்டையும் ஒருநாள் சரியும் என்பதற்கு ஏற்ப கே.டி.குஞ்சுமோனின் வீழ்ச்சியை பைம்பொழில் மீரான் எழுதியிருந்தது யதார்த்தமாக இருந்தது.
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.