கிராமசபாவின் முக்கியத்துவம்!புதுமுகங்கள் நியாஸ்கான், ஸ்வேதா கதாநாயகன் நாயகியாக நடிக்கும் படம் ‘அடிச்சுவடு’. முக்கிய வேடத்தில் தீர்த்திதரன், ‘குட்டிபுலி’ ராஜசிம்மன், ஜீவா ரவி, ‘பசங்க’ சிவக்குமார், மாரி வினோத், அம்பானி சங்கர், கல்லூரி காமாட்சி ஆகியோர் நடித்துள்ளனர். ஒளிப் பதிவு வினோத். இசை அப்பாஸ் ரபீக். ஸ்ரீலட்சுமி எம்.ஜி.ஆர் மூவீஸ் ராதாகிருஷ்ணன் தயாரித்துள்ளார். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் எம்.ஜி.ரெட்டி. இவர் ஏற்கனவே ‘6 முதல் 6’ படத்தை இயக்கியவர்.

இதன் படப்பிடிப்பு கொடைக்கானல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர் ஆகிய இடங்களில் 60 நாட்கள் நடைபெற்றதாம்.‘‘ஒரு நாட்டின் வளர்ச்சி கிராமத்திலிருந்து ஆரம்பிக்கிறது. கிராமங்கள் செழிப்பாக இருந்தால்தான் நாடு செழிப்பாக இருக்கும். பண்டைய காலங்களில் கிராமங்களின் குறைகளை கிராம சபா கூட்டங்கள் மூலம் நிவர்த்தி செய்து ஆட்சி செய்தார்கள்.

அந்த வகையில் இதில் உள்ளாட்சி அமைப்பின் கிராமசபா கூட்டத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளேன். இதில் நாயகன், நாயகி புதுமுகங்களாக இருந்தாலும் முத்திரை பதிக்குமளவுக்கு திறமைகாட்டியிருக்கிறார்கள்’’ என்கிறார் இயக்குர் எம்.ஜி.ரெட்டி.

- எஸ்ஸார்