ஒரு கதை சொல்லட்டுமாஒலி ஓவியம்!

கேரளாவின் திருச்சூரில் நடக்கும் பூரம் திருவிழா உலகப் பிரசித்தி பெற்ற விழா என்று யுனெஸ்கோ அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டது. அவ்விழாவின் அனைத்து கொண்டாட்டங்களையும் மிகத்துல்லியமாக பதிவு செய்ய வேண்டும் என்பது ரசூல் பூக்குட்டியின் கனவுத் திட்டம். அத்திட்டத்தில் சில பிரச்சனைகள் வருகின்றன. பிரச்சினைகளை சமாளித்து ரசூல் பூக்குட்டி வெற்றிகரமாக தன் கனவை நனவாக்கினாரா என்பதே படம்.

நிஜத்தில் எப்படியோ அப்படியே திரையிலும் வர வேண்டும் என்பதால் ஒலி வடிவமைப்பாளர் கேரக்டருக்கு சிறப்புக்கு மேல் சிறப்பு செய்திருக்கிறார் ரசூல் பூக்குட்டி. சில இடங்களில் ஒலி வடிவமைப்பாளருக்கு இவ்வளவு அதிகாரமா என்று கேள்வி வந்தாலும் அது படைப்பாளிக்கே இருக்கக்கூடிய செருக்கு என்பதால் குறையாகத் தெரியவில்லை.

பூரம் விழாவின் கடைசி நாள் கொண்டாட்டத்தில் கேட்கும் ஒலிகள் செவிகளுக்கு விருந்து. இசையமைப்பாளார் ராகுல் ராஜ் தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார். டாக்குமெண்ட்ரி படத்தையும் வெகுஜனத்துக்கான படமாக எடுக்கலாம் என்பதை சுவாரஸ்யமான திரைக்
கதையில் சொல்லியுள்ளார் இயக்குநர் பிரசாத் பிரபாகர்.