ஸ்மிருதியோடு வாட்ஸப் கடலை!



‘தடம்’ படத்தின் மூலம் தடம் பதித்திருக்கிறார் ஸ்மிருதி வெங்கட். அவரிடம் வாட்ஸப்பிலேயே ஜாலியாக இண்டர்வியூ செய்தோம்.

“பெயர்?”
“ஸ்மிருதி வெங்கட்”
“ஊர்?”
“சென்னை”
“ஸ்கூல்?”
“செயிண்ட் ஜான்ஸ் பள்ளி”
“கல்லூரி?”
“வைஷ்ணவா கல்லூரி”
“பெருமைப் படும் விஷயம்?”
“மாடல், நடிகை என்ற அந்தஸ்து”
“ஆயகலைகளில்  உங்களுக்கு எத்தனை கலைகள் தெரியும்?”
“சினிமா, சமையல், பெயிண்டிங்”
“பொழுதுபோக்கு?”
“டிராவல். 3 மாசத்துக்கு ஒரு முறை எங்காவது பறந்துவிடுவேன்”

“பொன்மொழி?”

“நம்மிடம் இருக்கும் சிறிய நல்லெண்ணம் வாழ்க்கையில் பெரிய இடத்தைப் பிடிக்க உதவி செய்யும்”
“வாழ்க்கையில் உயர்வு கொடுத்த விஷயம்?”
“பொறுமை. சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. அது நிறைவேற நான்கு ஆண்டுகள் காத்திருந்தேன்”
“சட்டத்தை உங்ககிட்ட கொடுத்தால் ப்ரேக் பண்ண நினைக்கும் விஷயம் எது?”
“பெண்களைப் பாதுகாக்க முடியாத சட்டத்தை முற்றிலும் ஒழித்துக் கட்டுவேன்”
“பலவீனம்?”
“இரக்க குணம் அதிகம். யாராவது அப்பாவியாகத் தெரிந்தால் விட்டுக் கொடுத்துவிடுவேன்”
“ரசிகர்களுக்கு அட்வைஸ்?”

“என் தோழி ஒருவரிடம் எனக்கு ஈகோ பிரச்சனை இருந்தது. அப்போது சில காலம் நாங்க டூ விட்டுக் கொண்டோம். ரொம்ப நாளைக்குப் பிறகு ராசியாகிவிட்டோம். அந்த ஒரு சம்பவம், பிறர் நம்மை விமர்சனம் பண்ணினால் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற மனப்பான்மையை வளர்த்துவிட்டது. எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் கான்சப்ட் யூஸ் ஆகாது என்பது புரிந்தது. சின்னவங்களோ பெரியவங்களோ, படிச்சவங்களோ, படிக்காதவங்களோ, எல்லாரிடமும் ஏதோ ஒரு நல்ல விஷயம் இருக்கும். அதை ஒப்புக் கொள்ள வேண்டும். உதவாக்கரை என்ற பிரிவே இல்லை. அப்படி யாரையும் நினைக்காதீர்கள்.”

“பெண்ணுக்கு இருக்க வேண்டிய மூன்று முக்கிய குணங்கள்?”
“தைரியம், அன்பு, நேர்கொண்ட பார்வை”
“வெற்றிக்கு என்ன தேவை?”
“கடின உழைப்பு, தனி மனித ஒழுக்கம்”
“கடைசியாக அழுத படம்?”
“நிறைய படத்துக்கு அழுதுடுவேன். சமீபத்துல ‘96’ பார்த்துட்டு...”
“பிடிச்ச படம்?”
“எப்பவுமே ‘நளதமயந்தி’. ‘தடம்’ என்னுடைய முதல் படம் என்பதால்”
“சமீபத்திய சோகம்?”
“பெண்களுக்கு ஏதாவது பாதிப்பு என்றாலே என்னையும் அறியாமல் அழுதுவிடுவேன். அப்படி என்னையும் மீற அழவைத்தது பொள்ளாச்சி, கோவை சம்பவங்கள்”
“ஆணுக்கான தகுதி?”
“நேர்மை”
“காதல்?”
“வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் அர்த்தமுள்ளவைகளாக மாற்றும் அற்புத உணர்வு”
“கிசுகிசு?”
“என்னுடைய தலைமுடி, உடல் எடையைப் பற்றி கிசுகிசுப்பாங்க. அதற்கெல்லாம் நான் கவலைப்படமாட்டேன்”
“வண்ணத்திரை வாசகர்களுக்கு என்ன சொல்ல விரும்பறீங்க?”
“எப்போதும் சந்தோஷமாயிருங்கள். பணம் வரும், போகும். எல்லா நேரத்திலும் ஒரே மைண்ட்செட்ல இருங்க”

- கடலை போட்டவர் : சுரா