ரோல்மாடல்!



ரீடர்ஸ் கிளாப்ஸ்!

நிச்சயமற்ற வாழ்க்கையில் நடக்கும் எதிர்பாரா நிகழ்வுகளை எதிர்ப்பார்த்து வாழ பழகுகிறேன் என்கிற சம்யுக்தா மேனனின் பேட்டி ரொம்ப நேரம் யோசிக்க வைத்தது.
- கே.முருகன், திருவண்ணாமலை.

நடுப்பக்க டுவிங்கிள், என்னதான் பதுக்கி வைத்தாலும் அவரையும் மீறி நேர்க்கோட்டில் பளீரென்று தெரியதான் செய்கிறது.
- கவிஞர் கவிக்குமாரன், சென்னை-99.

நடிகர் - பாடலாசிரியர் மணவை பொன்.மாணிக்கம் அவர்களின் டைட்டில்ஸ் டாக் பகுதி அருமை. அவரது வெற்றிக்கு வாழ்த்துகள்.
- எம்.சேவுகப்பெருமாள், பெருமகளூர்.

சரண்ராஜின் மகன் தேஜ்ராஜின் பேட்டி சிறப்பு. அப்பாவின் புகழ் நிழலை உதறி தன்னுடைய இடத்துக்காக தானே போராடும் அவரது தன்னம்பிக்கை பளிச்.
- அ.காஜாமைதீன், நெய்க்காரப்பட்டி.

மம்தாவின் வாழ்க்கைக்கதை மனதை நெகிழவைத்தது. ஒரு கொடிய நோய் தாக்கியும் மனம் தளராது அதை எதிர்த்துப் போராடி வென்று காட்டிய அவர் எல்லாருக்குமே ரோல்மாடல்.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

பிரியாமணியின் குளியல் படத்தை போட்டு கோடைக்காலத்தை சில்லுன்னு வரவேற்ற ‘வண்ணத்திரை’க்கு நன்றி.
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

‘மின்னுவதெல்லாம் பொன்தான்’ பகுதியில் ‘கண்கள் இரண்டால்’ பாடல் புகழ் ஜேம்ஸ் வசந்தம் குறித்த கட்டுரை அருமை.
- கவிஞர் கா.திருமாவளவன், திருவெண்ணெய்நல்லூர்.