ஒரு அடார் லவ்



Coming to the age!

ரோஷனும், நூரின் ஷெரீப்பும் பள்ளி நண்பர்கள். அதே பள்ளியில் சேரும் ப்ரியா வாரியருக்கு சைட் டிராக்கில் ரூட் விடுகிறார் ரோஷன். இருவரும் காதலிக்கத் தொடங்குகின்றனர். ஒரு சூழ்நிலையில் ரோஷனை விட்டு பிரிந்து செல்கிறார் பிரியா. எப்படியாவது ப்ரியாவுடன் சேர வேண்டும் என்பதற்காக நூரின் ஷெரீப்பை காதலிப்பது போல் பிலிம் காட்டுகிறார் ரோஷன். அதன்பின்னர் என்ன ஆனது என்பது மீதிக்கதை.

கண்ணடி அழகி பிரியா வாரியர் துறு துறுப்பான நடிப்பில் கவனிக்க வைக்கிறார். ஸ்கூல் பையன் கேரக்டருக்கு பொருத்தமாக இருக்கிறார் ரோஷன். நாயகிக்கு புருவம் கைக்கொடுப்பது போல் நூரின் ஷெரீப்புக்கு பருவம் கைகொடுக்கிறது.

ஷான் ரஹ்மான் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளன. ஒளிப்பதிவாளர் சீனு சித்தார்த் தன் பணியை சிறப்பாக செய்துள்ளார்.ஒரு பள்ளிக் காதலையும் அதில் இல்லாத மெச்சுரிட்டியையும் அழகாக காட்டியிருக்கிறார் டைரக்டர் உமர் லுலு.