பருவக்கோடு!



ரீடர்ஸ் கிளாப்ஸ்!

முன்னாடி போடவேண்டியதை பின்னாடியும், பின்னாடி போடவேண்டியதை முன்னாடியுமா அட்டைப்படங்களை மாற்றிப் போட்டுட்டேளே?
- சுவாமி சுப்ரமணியா, குனியமுத்தூர்.

சினிமாவிலும் திருநங்கைகள் சாதிக்கலாம் என்கிற தலைப்பே பாசிட்டிவ்வாக இருந்தது. ‘பேரன்பு’ படத்தில் மம்முட்டிக்கு மனைவியாக நடித்த திருநங்கை அஞ்சலி அமீருக்கு, மேன்மேலும் வாய்ப்புகள்
அமையவேண்டும்.
கவிஞர் கா.திருமாவளவன், திருவெண்ணெய்நல்லூர்.

சரோஜாதேவி பதில்கள் கிளுகிளுக்க மட்டுமல்ல. சிந்திக்கவும் தூண்டுகிறது.
- எம்.சேவுகப் பெருமாள், பெருமகளூர்.

‘மின்னுவதெல்லாம் பொன்தான்’ தொடரின் கடைசியில், ரமா கொஞ்சம் லேட்டாக மின்னிய பொன் என்று முடிந்த கடைசி வரிகள் கலங்க வைத்தன.
- பி.ராஜேந்திரன், திருவண்ணாமலை.

சினிமாவின் எதிர்காலம் 3டிதான் என்கிற ஹாலிவுட் நடிகை ரோஸா சல்ஸாரின் கருத்து கவனிக்கத்தக்கது. ஹாலிவுட் நடிகைகளையும் தேடிப்
பிடித்து பேட்டியெடுக்கும் உங்க சின்சியாரிட்டிக்கு அளவே இல்லையா?
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

ரச்சனாவின் நடுப்பக்கத்துக்கு நீங்க அடிச்ச கமெண்டு சும்மா நச்சுன்னு இருந்துச்சி.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

‘பருவக்காடு பரிசம் போடு’ பாவையைப் பார்த்தபின்பு பசி புரட்டி எடுக்கிறது.
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.