சித்திரம் பேசுதடி-2



சித்திரம் பேசியதா?

‘உலா’ என்ற பெயரில் உருவான படம் தற்போது ‘சித்திரம் பேசுதடி 2’ என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது. சித்திரம் பேசுமா, பேசாதா என்பதை பார்ப்போம்.விதார்த், அஜ்மல், நந்தன் லோகநாதன், நிவாஸ் ஆதித்தன், ராதிகா ஆப்தே ஆகிய ஐந்து கதாபாத்திரங்களுக்கு இடையே நடக்கும் சம்பவம் தான் படத்தின் மையக் கரு.
படத்தில் வரும் முக்கிய கதாபாத்திரங்களுக்கு ஒருவருக்கொருவர் தொடர்பு இல்லை என்றாலும் ஏதோ ஒரு வகையில் தொடர்பு ஏற்படுகிறது. அவர்களின் பிரச்சனை என்ன? அதற்கு என்ன தீர்வு? என்பதை விறுவிறுப்பாக சொல்லியுள்ளார்கள்.

விதார்த், அசோக், அஜ்மல் ஆகியோர் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள். சிக்கலான கேரக்டரில் சிம்பிளாக நடித்து சிம்பதியை கிரியேட் பண்ணுகிறார் ராதிகா ஆப்தே. நிவேதிதா, காயத்ரி, ப்ரியா பானர்ஜி, நிவாஸ் ஆதித்தன், பிளேடு சங்கர், ‘ஆடுகளம்’ நரேன், சுப்பு பஞ்சு, அழகம் பெருமாள் ஆகிய அனைவரும் நன்று.

சாஜன் மாதவ் இசையில் பின்னணி இசையும், பாடல்களும் கேட்கும்படியாக இருக்கிறது. பத்மேஷின் ஒளிப்பதிவு படத்துக்கு பலம். புளித்துப்போன கதையாக இருந்தாலும் மிகப் பெரிய நட்சத்திரப் பட்டாளத்தை வைத்து சித்திரத்தை பேசும்படியாகவே இயக்கியுள்ளார் ராஜன் மாதவ்.