உல்லாசம்!சரோஜாதேவி பதில்கள்

* ஐப்பசியில் அடைமழைதானே?
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
நிலத்துக்கு ஓக்கே என்றால் பொத்துக்கொண்டு பொழிய வானத்துக்கு குஷிதான்!

* ஒரு பெண்ணின் ஆயுதம் எது?
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.
ஆழம். மனசைச் சொன்னேன்.

* ‘உல்லாசம்’ என்கிற வார்த்தைக்கு என்ன அர்த்தம்?
- கே.நடராஜன், திருவண்ணாமலை.
சொகுசாக இருப்பதென்று அர்த்தம். ஆனால், ஊடகங்கள் ‘உல்லாசத்தை’ மஜாவாக்கி விட்டன.

* திருமணமான பெண்கள் முதுகு தெரியும்படி ஜாக்கெட் அணியலாமா?
- எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு.
ஐம்பது ஆண்டுகள் பழமையான கேள்வி. கொஞ்சம் முன்னுக்கு வாங்க பாஸ்.

* சம்சாரம் மட்டும்தான் ஷாக் அடிக்குமா?
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.
எந்த பிளக் பாயிண்டில் கையை வெச்சாலும் ஷாக் அடிக்கத்தான் செய்யும்.