‘பிரா’ப்ளமான நாடு!சரோஜாதேவி பதில்கள்

* பார்த்தால் காதல் வருமா, பார்க்கப் பார்க்க காதல் வருமா?
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.
ஓ.. வருமே! பார்த்தாலும் வரும், பார்க்கப் பார்க்கவும் வரும். காசா, பணமா. காதல்தானே?

* தினமும் காலையில் கணவன், மனைவி முகத்தில்தான் விழிக்க வேண்டுமா?
- எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு (வேலூர்)
முகத்தையோ, முதுகையோ. எதைக் காட்டுகிறார்களோ, அதைப் பார்த்துவிட்டு விழித்துத் தொலைக்க வேண்டியதுதானே?

* காதலியின் முன்னழகை முழுமையாகக் கண்டால் மூச்சும், பின்னழகைக் கண்டால் பேச்சும் நின்றுவிடுமாமே?
- கே.செல்வராஜ், வழுதரெட்டிப்பாளையம்.
அதென்ன காதலியா, இல்லை கன்னித்தீவு மந்திரவாதியா? கவிதை எழுதும்
பசங்களோடு சேராதீர்கள் செல்வராஜ்.

* எது உள்ளே, எது வெளியே இருக்க வேண்டும்?
- கே.நடராஜன், திருவண்ணாமலை.
உள்ளே காதலும், வெளியே காமமும் நிறைந்தவனே நல்ல கணவனாக முடியும்.
நீங்கள் ஏதாவது பச்சையாக பதில் எதிர்பார்த்தீர்களோ?

* உலக அதிசயமான பாபிலோனா தொங்கும் தோட்டம் எப்படி இருக்கும்?
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
நீங்கள் கருதுவதைப் போல அங்கே காய்கள் காய்த்துத் தொங்கியதாகத் தெரியவில்லை. சாதாரணமான மாடித்தோட்டம்தான். அசாதாரணமான வடிவிலும், சைஸிலும் அமைக்கப்பட்டிருந்ததாம்.

* அழகிப் போட்டிகள் நடத்துவது எதற்காக?
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.
அவர்கள் காட்டுவதற்காக. நீங்கள் பார்ப்பதற்காக.

* ‘சபலம்’ என்பது ஆணுக்கு மட்டுமே உரிய உணர்வா?
- சுரேஷ், திருச்சிற்றம்பலம்.
அப்படித்தான் பொதுப்புத்தி கருதுகிறது. சபலிஸ்டு பெண்களால் ஏற்படும் ‘சம்பவம்’ பற்றி ஆண் வெளியே சொல்ல அச்சப்படுகிறான். Yes, Male is also being raped. சமீபத்திய #MeToo டிரெண்டிங்கில் ஃபேஸ்புக்கில் மானாவரியாக ‘சம்பவங்கள்’ அம்பலமாகின.

* ‘பிரா’ பற்றி ஏதேனும் வித்தியாசமான தகவல்?
- பி.கம்பர் ஒப்பிலான், கோவிலம்பாக்கம்.

ஜெர்மனியில் பெண் பணியாளர்கள், ‘பிரா’ அணிவது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. அணியாதவர்கள் மீது நிர்வாகம் நடவடிக்கை எடுக்க சட்டம் வகை
செய்கிறது. அதிலும் வெள்ளை அல்லது உடல் நிற பிரா மட்டுமே அணியவேண்டும். ரொம்ப ‘பிரா’ ப்ளமான நாடா இருக்கும் போலிருக்கு இல்லை?
* சரோ, பல்லாங்குழி விளையாடுவீரா?
- சுவாமி சுப்ரமணியா, குனியமுத்தூர்.கில்லிதாண்டு கூட விளையாடுவேன்.

* ‘மன்மதன் அம்பு’ எப்படியிருக்கும்?
- கே.ராஜேஷ், அவனியாபுரம்.
ரதியிடம் கேட்கவேண்டிய கேள்வி.