லவ் பண்ண தெரியாது! கடுக்கா கொடுக்கிறார் அமைராஜாக்கிசானுடன் ‘குங்ஃபூ யோகா’, தனுஷின் ‘அனேகன்’ என கலக்கிய அமைரா தஸ்தூர், இப்போது ஜி.வி.பிரகாஷின் ‘காதலைத் தேடி நித்யா நந்தா’ படப்பிடிப்பில் பரபரவென இருக்கிறார். அமைராவின் இன்ஸ்டா பக்கம் லுக் விட்டால், உச்சந்தலையில் ஒரு டன் ஐஸ்கட்டி வைக்கிறது அவரது அசத்தலான நீச்சலுடை டால்பின் கொண்டாட்ட க்ளிக்குகள்.

“அமைரான்னா என்ன?”

“அரபிப் பெயர். அர்த்தம் இளவரசி. நான் பிறந்து வளர்ந்தது மும்பையில்தான். ஸ்கூல் படிக்கும்போதே ஆக்ட்டிங்ல ஆர்வம் வந்திடுச்சு. பதினாறு வயசிலேயே மாடலிங். அந்த டைம்ல ஒரு விளம்பரப் பட ஆஃபர் வந்தது. அதுக்காக எங்க ஸ்கூல்ல லீவு கேட்டேன். ‘படிக்கற பொண்ணுக்கு நடிப்பு எதுக்கு?’னு அவங்க ஸ்ட்ரிக்ட்டா லீவு தரமாட்டேன்னு சொல்லிட்டாங்க.

நான் என்ன பண்ணினேன் தெரியுமா? அப்புறம், அந்த ஸ்கூலையே உதறிட்டேன்.  ஆனா, அந்த விளம்பரப் படத்துல போய் நடிச்சு  முடிச்சதும்  வேறொரு ஸ்கூல்லபோய் சேர்ந்து, விட்ட படிப்பை தொடர்ந்தேன். என்னோட ஆக்ட்டிங் ஆர்வத்துக்கு இது ஒரு சிம்பிள் எக்ஸாம்பிள்தான்.”“குச்சி மாதிரி உடம்பை மெயின்டெயின் பண்றீங்க.

சீக்ரெட் என்ன?”

“நான் ஸ்கூல் படிக்கும்போது கொஞ்சம் கொழுகொழுனு புஷ்டியாகத்தான் இருந்திருக்கேன். அப்புறம் மாடலிங் வந்த பிறகுதான் ஃபிட்னஸ் மீது அக்கறை வந்துச்சு. ஃபிட்னஸ்னால நாம அழகாகத் தெரிவோம். நமக்குள் ஒரு தன்னம்பிக்கை இருக்கும், ஸ்கின்னும் பொலிவாக ஆகும்னு சொல்வாங்க. அது உண்மைதான்.

 இப்ப  ஜிம்னாஸ்டிக், கிக் பாக்ஸிங், வெயிட் ட்ரெயினிங், யோகா, டான்ஸிங் எல்லாம் ஒண்ணு மாத்தி ஒண்ணு ரெகுலரா ஃபாலோ பண்றேன். அப்புறம் தண்ணீர் நிறைய குடிப்பேன். தினமும் ரெண்டு லிட்டர் தண்ணீர் குடிச்சா ரொம்ப ஹெல்தினு சொல்வாங்க. சீக்ரெட்னு ஸ்பெஷலா சொல்றதுக்கு ஒண்ணுமில்ல.”

“அமைரா செம ரொமான்டிக் பொண்ணா...?”

“லவ், டூயட் எல்லாம் படங்கள்லதான். நிஜத்துல ரொமான்டிக் பொண்ணு இல்ல. ரியல் லைஃப்ல நான் unromantic கேர்ள். திடீர்னு ஒரு பையன் என் முன்னாடி வந்து நின்னு ஒரு ரோஸ் நீட்டினால் கூட, ‘அழகான ரோஸ் அது. அதை ஏன் செடியில் இருந்து பறிச்சே?’னு அப்பாவியா கேட்பேன். சாக்லெட் கொடுத்து ப்ரபோஸ் பண்றவங்ககிட்ட, நீங்க  என்னை குண்டுப் பொண்ணு ஆக்கப் பாக்குறீங்களா பிரதர்?னு கேட்டுடுவேன்.

அவ்ளோ ஏன்? லவ் லெட்டர் கொடுத்தால்கூட, படிக்க டைம் இல்ல, வாட்ஸ் அப்ல டெக்ஸ்ட் பண்ணி அனுப்புங்கனு சொல்லி எஸ்கேப் ஆகிடுவேன். அப்படி ஒரு அன் ரொமான்டிக் ஆளுங்க நான்.”