நடுப்பக்க பார்ட்டி!ரீடர்ஸ் கிளாப்ஸ்!

போர் விமானத்தில் ஊழல் என்று கவர்ச்சி புளோ அப் கமெண்டில் கூட அரசியல் பேசும் உங்க சாமர்த்தியம் யாருக்கும் வராது சாமியோவ்.
- கவிஞர் கா.திருமாவளவன், திருவெண்ணெய்நல்லூர்.

மெரினா புரட்சி சம்பவங்கள் படமா கின்றன என்கிற செய்தி மகிழ்ச்சியைத் தருகிறது. சமகால மக்கள் பிரச்னைகளை தொடர்ந்து ஆவணப்படுத்துவதில் சமீப வருடங்களாக தமிழ் சினிமா நன்கு முன்னேறியிருக்கிறது.
- அ.காஜாமைதீன், நெய்க்காரப்பட்டி.

முதல் படத்திலேயே பாலா என்கிற மோதிரக்கையால் குட்டுப்படும் விக்ரமின் வாரிசு துருவ் பற்றிய கட்டுரை அருமை. பாலாவின் ‘வர்மா’ மூலம் வரும் துருவ், நீ நல்ல வரணும்பா.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

நடுப்பக்க பார்ட்டியும் பிரமாதம். பார்ட்டியின் நடுப்பக்கமும் பிரமாதமோ பிரமாதம்!
- கே.செல்வராஜ்,
வழுதரெட்டிப்பாளையம்.

66ஆம் பக்கத்து அம்மணி மனீஷாயாதவிடம் அகலக் கால் வைப்பது ஆபத்து என்று எச்சரித்து வையுங்கள்.
- சுவாமி சுப்ரமணியா, குனியமுத்தூர்.

‘வஞ்சகர் உலகம்’ படுக்கையறைக் காட்சிகள் குறித்து சாந்தினி சொன்ன சமாதானம் சரியாகத்தான் இருக்கிறது.
- கே.நடராஜன், திருவண்ணாமலை.

அழகான அம்மா லதாராவின் அசுர வளர்ச்சி பிரமிக்க வைப்பதாக இருக்கிறது.
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி